If this song reminds you Kavignar Ramalingam Pillai’s “SUriyan varuvadu”, I am helpless since that was the piece that inspired me to compose a similar one on my ishTa deyvam Murugan.
YouTube link: http://www.youtube.com/watch?v=oHEIQgCTFlI
SArangA Adi Nagpur Srinivasan
14.05.1964 Nagpur 02.20 PM (Modified on 15.05.2011)
01. KaNNukkuL teriginRa KandA vA
eNNamellAm niRainda KumarA vA
paNNukkuL paravi niRkum MurugA vA
eNNum ezhuttAna GuhanE vA (KaNNukkuL)
02. kARRil salasalakkum isaiyE vA – manac
cERRil mugizhtta aru malarE vA – viNNavar
pORRiDum vElavanE vA – en vidiyai
mARRiDum guruvE vA (KaNNukkuL)
03. Pankaja malarppAdam paNindiDuvEn
angayaRkaNNiyin tavappudalvA
sengamalakkaram tandenaiAtkoLLa
vandiDum vaLLi maNavALanE en (KaNNukkuL)
04. nAnmaRai pORRiDum nAyakanE
dInarkaruL seyyum sIlanE
KOlamayil mIdu amarndavanE en
KOlam kaNDu irangi nI vA (KaNNukkuL)
ஸாரங்கா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
14.05.1964 நாகபுரி 02.20 PM (திருத்தப்பட்ட நாள்: 15.05.2011)
01. கண்ணுக்குள் தெரிகின்ற கந்தா வா
எண்ணமெல்லாம் நிறைந்த குமரா வா
பண்ணுக்குள் பரவி நிற்கும் முருகா வா
எண்ணும் எழுத்தான குஹனே வா (கண்ணுக்குள்)
02. காற்றில் சலசலக்கும் இசையே வா – மனச்
சேற்றில் முகிழ்த்த அரு மலரே வா – விண்ணவர்
போற்றிடும் வேலவனே வா – என் விதியை
மாற்றிடும் குருவே வா (கண்ணுக்குள்)
03. பங்கஜ மலர்ப்பாதம் பணிந்திடுவேன்
அங்கயற்கண்ணியின் தவப்புதல்வா
செங்கமலக்கரம் தந்தெனைஆட்கொள்ள
வந்திடும் வள்ளி மணவாளனே என் (கண்ணுக்குள்)
04. நான்மறை போற்றிடும் நாயகனே
தீனர்க்கருள் செய்யும் சீலனே
கோலமயில் மீது அமர்ந்தவனே என்
கோலம் கண்டு இரங்கி நீ வா (கண்ணுக்குள்)