Archive for Vadivelavan

ODi vA vA kandA

Posted in Murugan with tags , , , , , , , , , , , on August 3, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=Z–UFAJD-2A   

Mishra mAND        Adi       Nagpur Srinivasan

20.07.1965 Calcutta 03.00 PM (Modified on: 26.07.2011)

Pallavi

ODi vA vA kandA ODi vA vA

OnkArapporuLE bhajikkum en mun nI (ODi)

saraNam

kOla mayilERum guruparanE kuRa

vaLLiyai maNanda guNasIlanE

mAl marugA vaDivElavanE…….

nAnmaRaipporuLE nAn kANa nI vA (ODi)

tIrAda tunbattait tIrttiDavE inda

dInan enaikkaDaittERRiDavE

pArAmukham tavirttu parivuDanE nI

vArAdu pOnAl uyir tariyEn (ODi)

மிஷ்ரமாண்ட்  ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

20.07.1965 கல்கத்தா 03.00 PM (திருத்தப்பட்ட நாள்: 26.07.2011)

பல்லவி

ஓடி வா வா கந்தா ஓடி வா வா

ஓங்காரப்பொருளே பஜிக்கும் என் முன் நீ (ஓடி)

சரணம்

1. கோல மயிலேறும் குருபரனே குற

வள்ளியை மணந்த குணசீலனே

மால் மருகா வடிவேலவனே…….

நான்மறைப்பொருளே நான் காண நீ வா (ஓடி)

2. தீராத துன்பத்தைத் தீர்த்திடவே இந்த

தீனன் எனைக் கடைத்தேற்றிடவே

பாராமுகம் தவிர்த்து பரிவுடனே நீ

வாராது போனால் உயிர் தரியேன் (ஓடி)


tayakkamEn aruL

Posted in Murugan with tags , , , , , , , , , , , , on July 4, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=lcG1s1COyYc

bilahari        Adi       Nagpur Srinivasan

21.03.1965 Nagpur 02.35 PM (Modified on: 01.07.2011)

vruttam

paraman paradEvi maindanE

pArengum paraviDum praNavamE

OrARu mukhanE panniru kaiyanE

nEril vandu aruL puriyat tayakkamEn?    

Pallavi

tayakkamEn aruL puriya? en ayyanE

un padam paRRi niRkinREn karam tandu ATkoLLa (tayakkamEn)

a. pallavi

mayakkattil Azhndu tavaRu pala seydEn

karuNaiyuDan mannikka vENDiyum vandiDa (tayakkamEn)

saraNam

vAnavar tuyarai nIkkiDa sUranai

mAytta sentil murugA kanivu koLLAyO?

kAlam tAzhttAmal kArmayil mIdERi

vandiDuvAy vaDi vElavanE innum (tayakkamEn)

 

பிலஹரி       ஆதி    நாகபுரி ஸ்ரீனிவாஸன்   

21.03.1965   நாகபுரி 02.35 PM (திருத்தப்பட்ட நாள்: 01.07.2011)

வ்ருத்தம்

பரமன் பரதேவி மைந்தனே

பாரெங்கும் பரவிடும் ப்ரணவமே

ஓராறு முகனே பன்னிரு கையனே

நேரில் வந்து அருள் புரியத் தயக்கமேன்?

பல்லவி

தயக்கமேன் அருள் புரிய? என் அய்யனே

உன் பதம் பற்றி நிற்கின்றேன் கரம் தந்து ஆட்கொள்ள (தயக்கமேன்)

அ. பல்லவி

மயக்கத்தில் ஆழ்ந்து தவறு பல செய்தேன்

கருணையுடன் மன்னிக்க வேண்டியும் வந்திட (தயக்கமேன்)

சரணம்

வானவர் துயரை நீக்கிட சூரனை

மாய்த்த செந்தில் முருகா கனிவு கொள்ளாயோ?

காலம் தாழ்த்தாமல் கார்மயில் மீதேறி

வந்திடுவாய் வடி வேலவனே இன்னும் (தயக்கமேன்)

kAliR cilambolikka

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , on June 8, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=dms6BdBYGEI   

 

SahAnA        Adi       Nagpur Srinivasan

27.01.1965 Nagpur 04.50 AM (Modified on: 07.06.2011)

 

vruttam

mAyaiyai ozhittu mana iruL nIkkum

tAyinai otta daNDapANi theyvamE

pancAkshara tattuvattiRku upadhEsitta

shaTAksharanE ShaNmukhanE

tUyanE en appan guhanE KandA

Pallavi

kAliR cilambolikka taLar naDai pOTTu

vElil suDar vIsa aDiyeDuttu nI vA

(KAliR cilambolikka nI vA)

a. pallavi

sUli sivakAmi maindanE SundaranE

sUranai mAytta SubramaNyanE  

(KAliR cilambolikka nI vA)

saraNam

veNNIRaNindu veRRippunnagaiyODu

veNpagai konRa vElavanE

kaNNIr perukkik kAttirukkum en

tApattait taNittiDa tiruttaNikai viTTu  

(KAliR cilambolikka nI vA)

 

 

ஸஹானா நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

27.01.1965   நாகபுரி 04.50 AM (திருத்தப்பட்ட நாள்: 07.06.2011)

 

வ்ருத்தம்

மாயையை ஒழித்து மன இருள் நீக்கும்

தாயினை ஒத்த தண்டபாணி தெய்வமே

பஞ்சாக்ஷர தத்துவத்திற்கு உபதேசித்த

ஷடாக்ஷரனே ஷண்முகனே

தூயனே என் அப்பன் குஹனே கந்தா

பல்லவி

காலிற் சிலம்பொலிக்க தளர் நடை போட்டு

வேலில் சுடர் வீச அடியெடுத்து நீ வா   

(காலிற் சிலம்பொலிக்க நீ வா )

அ. பல்லவி

சூலி சிவகாமி மைந்தனே ஸுந்தரனே

சூரனை மாய்த்த ஸுப்ரமண்யனே

(காலிற் சிலம்பொலிக்க நீ வா )

சரணம்

வெண்ணீறணிந்து வெற்றிப்புன்னகையோடு

வெண்பகை கொன்ற வேலவனே   

கண்ணீர் பெருக்கிக் காத்திருக்கும் என்

தாபத்தைத் தணித்திட திருத்தணிகை விட்டு   

(காலிற் சிலம்பொலிக்க நீ வா )

%d bloggers like this: