Archive for Thamizh language

MathurApuri vAzh MahArANiyE

Posted in ambikai with tags , , , , , , , , , , , , , , on November 16, 2018 by Melody

YouTube link:

ShaNmukhapriyA     Adi       Nagpur Srinivasan

Date 28.12.2014 Madras 12.53 PM (Modified on: 14 November 2018)

Pallavi

MathurApuri vAzh MahArANiyE

Malayadwajan sEyE mA maNiyE (MathurApuri)

anu pallavi

SundarEshwarar magizh manOhariyE

GaNapati ShaNmukhapriyE mAyE (MathurApuri)

caraNam

Adiyantam aRRa IshwariyE aran

PAdiyAy ninRemaik kAkkum dEviyE

JyOtiyAy en manadil oLirbavaLE engum

tEDiyum kANA karupporuLE (MathurApuri)

 

ஷண்முகப்ரியா        ஆதி       நாகபுரி ஸ்ரீனிவாஸன்

28.12.2014    மதராஸ்  12.53 PM   (திருத்தப்பட்ட நாள்: 14.11.2018)

பல்லவி

மா மதுராபுரி வாழ் மஹாராணியே

மலயத்வஜன் சேயே மா மணியே (மாமதுராபுரி)

அனு பல்லவி

ஸுந்தரேஷ்வரர் மகிழ் மனோஹரியே

கணபதி ஷண்முகப்ரியே மாயே (மாமதுராபுரி)

சரணம்

ஆதியந்தம் அற்ற ஈஷ்வரியே அரன்

பாதியாய் நின்றெமைக் காக்கும் தேவியே

ஜ்யோதியாய் என் மனதில் ஒளிர்பவளே எங்கும்

தேடியும் காணாக் கருப்பொருளே (மாமதுராபுரி)

KaDavuL onRE uru pala Ayinum

Posted in The Almighty with tags , , , , , , , , , , , , , , on May 31, 2018 by Melody

YouTube link: https://www.youtube.com/watch?v=gIhh-xjY8BQ&feature=youtu.be  

aTANA       Adi       Nagpur Srinivasan

12.11.2013 Madras Time 07.45 AM (Modified on: 27.05.2018)

 

Pallavi

KaDavuL onRE uru pala Ayinum

iru vinaigaL nIkkip pEraruL tarum (KaDavuL)

anu pallavi

MUvulagEttum nAn maRai navilum

nallOr vaNangum paramporuL aduvE (KaDavuL)

caraNam

ainkaranum aduvE aRumukhanum aduvE

Ezhu swarangaLil pADappaDuvadum aduvE  

ashTamA Siddhiyum navanidhiyum aduvE

dasha indriyangaLai ALvadum aduvE (KaDavuL)

 

அடாணா   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

12.11.2013 மதராஸ் நேரம் 07.45 AM (திருத்தப்பட்ட நாள்: 27.05.2018)

பல்லவி

கடவுள் ஒன்றே உரு பல ஆயினும்

இரு வினைகள் நீக்கிப் பேரருள் தரும் (கடவுள்)

அனு பல்லவி

மூவுலகேத்தும் நான் மறை நவிலும்

நல்லோர் வணங்கும் பரம்பொருள் அதுவே (கடவுள்)

சரணம்

ஐங்கரனும் அதுவே அறுமுகனும் அதுவே

ஏழு ஸ்வரங்களில் பாடப்படுவதும் அதுவே   

அஷ்டமா ஸித்தியும் நவநிதியும் அதுவே

தஷ இந்த்ரியங்களை ஆள்வதும் அதுவே (கடவுள்)

%d bloggers like this: