YouTube link:
Sindhubhairavi Adi Nagpur Srinivasan
21.12.2014 Madras 8.25 PM (Modified on: 28.07.2018)
Pallavi
engE irukkiRAy en iRaivA?
angE nAnum vara virumbugiREn (engE)
anu pallavi
angingenAdabaDi engum niRainda jOtiyE
tangu taDaiyilAda karuNai veLLamE (engE)
CaraNam
mangaiyorubhAgan enbar silar tiru
mangai uRai SrInivAsan enbar silar
tumbikkaiyOnE enas silar avan arumait
tambigaL aRumukhan ayyappan enas silar pOTRum nI (engE)
Saktiyum shivamum onRE enbAr silar
Hariyum Haranum onRE enbAr silar
kaNNiRkup pulappaDAda pemmAnE avaravar
kaNNiRku pala vaDivAyt tOnRum nI (engE)
ஸிந்துபைரவி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
21.12.2014 மதராஸ் 8.25 PM (திருத்தப்பட்ட நாள்: 28.07.2018)
பல்லவி
எங்கே இருக்கிறாய் என் இறைவா?
அங்கே நானும் வர விரும்புகிறேன் (எங்கே)
அனுபல்லவி
அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்த ஜோதியே
தங்கு தடையிலாத கருணை வெள்ளமே (எங்கே)
சரணம்
மங்கையொருபாகன் என்பர் சிலர் திரு
மங்கை உறை ஸ்ரீநிவாஸன் என்பர் சிலர்
தும்பிக்கையோனே எனச் சிலர் அவன் அருமைத்
தம்பிகள் அறுமுகன் அய்யப்பன் எனச் சிலர் போற்றும் நீ (எங்கே)
சக்தியும் சிவமும் ஒன்றே என்பார் சிலர்
ஹரியும் ஹரனும் ஒன்றே என்பார் சிலர்
கண்ணிற்குப் புலப்படாத பெம்மானே அவரவர்
கண்ணிற்கு பல வடிவாய்த் தோன்றும் நீ (எங்கே)