YouTube link: https://youtu.be/_9Q8ZUlGuaA
ravicandrikA Adi Nagpur Srinivasan
16.01.2009 Madras 09.05PM (Modified on: 17.03.2014)
Pallavi
vA vElavA vaDivElavA
Karam tandenai ATkoLLa nI..vA (vA vElavA)
a.pallavi
ainkaran sOdarA sankaran bAlA
ARumukhanE anjElena aNaikka (vA vElavA)
caraNam
nenjinil paravum nAvellAm inikkum
naRRamizhc col nI tandadanRO – en (nenjinil)
kanjamalarp padam paNindu unnaiyE
tanjamenRu nAn vandiDumpOdu (vA vElavA)
ரவிசந்த்ரிகா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
a16.01.2009 மதராஸ் 09.05PM (திருத்தப்பட்ட நாள்: 17.03.2014)
பல்லவி
வா வேலவா வடிவேலவா
கரம் தந்தெனை ஆட்கொள்ள நீ.வா (வா வேலவா)
அ. பல்லவி
ஐங்கரன் சோதரா சங்கரன் பாலா
ஆறுமுகனே அஞ்சேலென அணைக்க (வா வேலவா)
சரணம்
நெஞ்சினில் பரவும் நாவெல்லாம் இனிக்கும்
நற்றமிழ்ச் சொல் நீ தந்ததன்றோ – என் (நெஞ்சினில்)
கஞ்சமலர்ப் பதம் பணிந்து உன்னையே
தஞ்சமென்று நான் வந்திடும்போது (வா வேலவா)