YouTube link: http://www.youtube.com/watch?v=rfR_l2b1goc
Arabhi Adi Nagpur Srinivasan
19.10.64 Nagpur 3.30 PM (Modified On: 02.06.2011)
Pallavi
nAdarUpamE ~nAnadIpamE
~nAlattaikkAkkum OnkAramE (nAda)
anupallavi
vEdattin maRuvE varamaLikkum taruvE
GItattin karuvE ezhilmigu uruvE (nAda)
saraNam
tAnenum tIyinai azhittu enaik kAtta
vAn mazhaiyE vaLLi nAyakanE
mAnvizhiyAL dEvAnai maNALanE
Uninai urukki uLLoLi perukkum (nAda)
ஆரபி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
19.10.64 நாகபுரி 3.30 PM (திருத்தப்பட்ட நாள்: 02.06.2011)
பல்லவி
நாதரூபமே ஞானதீபமே
ஞாலத்தைக்காக்கும் ஓங்காரமே (நாத)
அனுபல்லவி
வேதத்தின் மறுவே வரமளிக்கும் தருவே
கீதத்தின் கருவே எழில்மிகு உருவே (நாத)
சரணம்
தானெனும் தீயினை அழித்து எனைக் காத்த
வான் மழையே வள்ளி நாயகனே
மான்விழியாள் தேவானை மணாளனே
ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் (நாத)