Archive for Shanmukhan

shaNmukhan kazhal nADu

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , , on December 29, 2011 by Melody

YouTube link: http://youtu.be/pRKLMi8WAs0   

 

 

 

 

shaNmukhapriyA Adi Nagpur Srinivasan

04.01.1970 Calcutta 03.30PM (Modified on: 28.12.2011)

 

Pallavi

 

shaNmukhan kazhal nADu manamE

Santatam avan pugazh pADu dinamE (shaNmukhan)

 

a. pallavi

 

madimayangi vazhi tavaRiDumpOdu

vidi tanai mARRum suDar vaDivElan (shaNmukhan)

 

saraNam

 

agandai koNDa nAnmukhan manam tirundi

amaidi peRavE ARezhuttait tandavan

tandai collE tiru mandiram enRAlum

anda tandaikkE man..dirap poruLuraitta (shaNmukhan)

 

 

ஷண்முகப்ரியா ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

04.01.1970 கல்கத்தா 03.30PM (திருத்தப்பட்ட நாள்: 28.12.2011)

 

பல்லவி

ஷண்முகன் கழல் நாடு மனமே

ஸந்ததம் அவன் புகழ் பாடு தினமே (ஷண்முகன்)

அ. பல்லவி

மதி மயங்கி வழி தவறிடும் போது

விதி தனை மாற்றும் சுடர் வடிவேலன் (ஷண்முகன்)

சரணம்

அகந்தை கொண்ட நான்முகன் மனம் திருந்தி

அமைதி பெறவே ஆறெழுத்தைத் தந்தவன்

தந்தை சொல்லே திரு மந்திரம் என்றாலும்

அந்த தந்தைக்கே மந்.திரப் பொருளுரைத்த (ஷண்முகன்)

viraindODi vA mAmayilERi vA

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , on August 31, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=_zfpcFKSoM8 

 

KAnaDA         rUpakam     Nagpur Srinivasan

25.04.1966    Calcutta     07.30 PM (Modified on: 21.08.2011)

 

Pallavi

viraindODi vA mAmayilERi vA 

vinai tIrttu enaik kAttiDavE parivuDan (viraindODi)

a. pallavi

tisaiyaRiYAmal tigaittu niRkinREn

bAlanE guNasIlanE vazhi kATTiDavE nI (viraindODi)

saraNam

matiyizandu nAn pizhai pala purindEn

unai maRandu vasam izhandu tirindEn

kaninda pazam pOl kARRinilADi

kaninda pazam pOl UzikkARRinilADi

uDal taLarndu manam miga vADinEn

tuDikkum ennuyir pirindu pOgumun

tuyar tuDaittiDa viraivinil vA

oru padaikkum manattin bhayattai agaRRa

karattai virittu aNaikka vA

tinaippuna vaLLi dEvasEnaiyuDan

enaiyum sErttukkoLvAyA?

aDimai urugi unai azhaikkiREn

un  sevi tanil en muRai vizhavillaiyO

tiru murugA, KadirvElA oru muRaiyAgilum varuvAyO?

nADinEn umai bAlakA enaiyATkoNDaruLa (viraindODi)

 

 

கானடா       ரூபகம்     நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

25.04.1966     கல்கத்தா   07.30 PM (திருத்தப்பட்ட நாள்: 21.08.2011)

 

பல்லவி

விரைந்தோடி வா மாமயிலேறி வா 

வினை தீர்த்து எனைக் காத்திடவே பரிவுடன் (விரைந்தோடி)

 

. பல்லவி

திசையறியாமல் திகைத்து  நிற்கின்றேன்

பாலனே குணசீலனே வழி காட்டிடவே நீ (விரைந்தோடி)

 

சரணம்

மதியிழந்து நான் பிழை பல புரிந்தேன்

உனை மறந்து வசம் இழந்து திரிந்தேன்

கனிந்த பழம் போல் காற்றினிலாடி

கனிந்த பழம் போல் ஊழிக்காற்றினிலாடி

உடல் தளர்ந்து மனம் மிக வாடினேன்

துடிக்கும் என்னுயிர் பிரிந்து போகுமுன்

துயர் துடைத்திட விரைவினில் வா

ஒரு பதைக்கும் மனத்தின் பயத்தை அகற்ற

கரத்தை விரித்து அணைக்க வா

தினைப்புன வள்ளி தேவசேனையுடன்

எனையும் சேர்த்துக்கொள்வாயா?

அடிமை உருகி உனை அழைக்கிறேன்

உன் செவிதனில் என் முறை விழவில்லையோ?

திரு முருகா கதிர்வேலா ஒரு முறையாகிலும் வருவாயோ?

நாடினேன் உமை பாலகா எனையாட்கொண்டருள (விரைந்தோடி)

%d bloggers like this: