This composition is based on the KiLikkaNNi on KAvaDiccindu meTTu and suits well for Kummi.
YouTube link: http://www.youtube.com/watch?v=8nvI0zjnzMY
cencuruTTi Adi Nagpur Srinivasan
03.11.1964 Nagpur 06.25 AM (Modified on: 23.05.2011)
1. KrushNAvatAranaDi KamSa SamhAranaDi
kArmEga vaNNanaDi KiLiyE KAkka varuvAnaDi KiLiyE
2. dEvaki BAlanaDi gOpiyar nAdanaDi
tEninum iniyanaDi KiLiyE dwArakai mannanaDi KiLiyE
3. Ayar kulattavanDi Anirai kAttiDavE
GOvardana giriyai KiLiyE kuDaiyAyp piDittAnaDi KiLiyE
4. PArttanukku sAradiyAyp pOril irundavanDi
PAr pugazh GItai tanai KiLiyE aruLiya KaNNanaDi KiLiyE
5. nandagOpan yasOdai kumaranAy GOkulattil
vaLarndu mAyam seydAnaDi KiLiyE vaSudEvan maindanaDi KiLiyE
6. JAlam seydu rukmiNiyai kaippiDitta kaLvanaDi
rAdhai maNALanaDi KiLiyE Satya BAmAvin nAdanaDi KiLiyE
7. vENugAnattAlavan bhuvanam muzhuvadaiyum
MayakkiyE ninRAnaDi KiLiyE malaimagaL aNNanaDi KiLiyE
8. SrI ranganAdanaDi vEdattaikkAttavanDi
AdarittALa nammai KiLiyE anjali seyvOmaDi KiLiyE
செஞ்சுருட்டி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
03.11.1964 நாகபுரி 06.25 AM (திருத்தப்பட்ட நாள்: 23.05.2011)
1. க்ருஷ்ணாவதாரனடி கம்ஸ ஸம்ஹாரனடி
கார்மேக வண்ணனடி கிளியே காக்க வருவானடி கிளியே
2. தேவகி பாலனடி கோபியர் நாதனடி
தேனினும் இனியனடி கிளியே த்வாரகை மன்னனடி கிளியே
3. ஆயர் குலத்தவன்டி ஆநிரை காத்திடவே
கோவர்தன கிரியை கிளியே குடையாய்ப் பிடித்தானடி கிளியே
4. பார்த்தனுக்கு சாரதியாய்ப் போரில் இருந்தவன்டி
பார் புகழ் கீதை தனை கிளியே அருளிய கண்ணனடி கிளியே
5. நந்தகோபன் யசோதை குமரனாய் கோகுலத்தில்
வளர்ந்து மாயம் செய்தானடி கிளியே வஸுதேவன் மைந்தனடி கிளியே
6. ஜாலம் செய்து ருக்மிணியை கைப்பிடித்த கள்வனடி
ராதை மணாளனடி கிளியே ஸத்ய பாமாவின் நாதனடி கிளியே
7. வேணுகானத்தாலவன் புவனம் முழுவதையும்
மயக்கியே நின்றானடி கிளியே மலைமகள் அண்ணனடி கிளியே
8. ஸ்ரீ ரங்கநாதனடி வேதத்தைக்காத்தவன்டி
ஆதரித்தாள நம்மை கிளியே அஞ்சலி செய்வோமடி கிளியே