Archive for rupakam

innam Or piRavi tALEnaiyA

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on March 22, 2017 by Melody

YouTube link:  https://youtu.be/CunxNC2klNs

https://www.youtube.com/watch?v=CunxNC2klNs&feature=youtu.be

Saraswati ManoharI   rUpakam    Nagpur Srinivasan

10.10.2011 Madras 6.15 AM (Modified on: 07.03.2017)

 

Pallavi

innam Or piRavi tALEnaiyA

ennaip paDaitta ammaiyappA (innam)

anu pallavi

munnam ennai taDuttATkoLvEnenRa

pinnum vArAmal pOnadaRiya (innam)

caraNam   

anbE uruvAna Ala vAyanE

tunbuRum enait taLLalAgumO?

nAraikku mukti tanda nAthanE– un

pErai maRavA enaik kai viDalAmO? (innam)

 

ஸரஸ்வதீ மனோஹரீ   ரூபகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

10.10.2011 மதராஸ் 6.15 AM   (திருத்தப்பட்ட நாள்: 07.03.2017)

 

பல்லவி

இன்னம் ஓர் பிறவி தாளேனையா

என்னைப் படைத்த அம்மையப்பா (இன்னம்)

அனுபல்லவி

முன்னம் என்னை தடுத்தாட்கொள்வேனென்ற

பின்னும் வாராமல் போனதறிய  (இன்னம்)

சரணம் 

அன்பே உருவான ஆல வாயனே

துன்புறும் எனை நீ தள்ளலாகுமோ?

நாரைக்கு முக்தி தந்த நாதனே உன்

பேரை மறவா எனைக் கை விடலாமோ? (இன்னம்)

enakkum aruLavE vA VElavA

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , , on July 29, 2016 by Melody

YouTube link:  https://www.youtube.com/watch?v=_XuSwZUzapw&feature=youtu.be

https://youtu.be/_XuSwZUzapw

I have sung in both PantuvarALi and HamSAnandi in this video which please do not forget to hear.

 

PantuvarALi/HamSAnandi       rUpakam       Nagpur Srinivasan

07.08.2011 Madras 07.00 PM (Modified on: 13 June 2016)

 

Pallavi

enakkum aruLavE vA VElavA

ennALum unai maRavA VElavA (enakkum)

 

a.pallavi

tanakkena vAzhAt tagaiyOrkaruLum nI

tAnenum agandaiyil uzhanRu mArgamaRiyA (enakkum)

 

caraNam

KaruNA vilASA kunRu tORADum nEsA

Kayilai nAthanukkup praNava upadEsA

Bhaktar mana iruLagaRRum prakAsA

Parindu karuNai kATTum pazhanimalai vAsA (enakkum)

 

பந்துவராளி/ஹம்ஸாநந்தி   ரூபகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

07.08.2011    மதராஸ் 07.00 PM   (திருத்தப்பட்ட நாள்: 13 June 2016)

 

பல்லவி

எனக்கும் அருளவே வா வேலவா

என்னாளும் உனை மறவா வேலவா (எனக்கும்)

 

அ. பல்லவி

தனக்கென வாழாத் தகையோர்க்கருளும் நீ

தானெனும் அகந்தையில் உழன்று மார்கமறியா (எனக்கும்)

 

சரணம்

கருணா விலாஸா குன்று தோறாடும் நேசா

கயிலை நாதனுக்கு ப்ரணவ உபதேசா

பக்தர் மன இருளகற்றும் ப்ரகாசா

பரிந்து கருணை காட்டும் பழனிமலை வாசா (எனக்கும்)

Cinnam ciRu padam vaittu

Posted in KrushNan with tags , , , , , , , , , , , , , , , , , , , on November 26, 2015 by Melody

YouTube link: https://youtu.be/7QWJy982NeQ

https://www.youtube.com/watch?v=7QWJy982NeQ&feature=youtu.be

 

 

nIlaMaNi/ManOlayam      rUpakam     Nagpur Srinivasan

04.12.2009   Madras      14.35 Hrs. (Modified on: 15th November 2015)

 

Pallavi

Cinnam ciRu padam vaittu ennagattE varuvAyO?

kannam kuziyac cirittuaruLAyO un?  (Cinnam)

 

anu pallavi

kAlil silambolikkat tOLil mAlai asaiya

Alilai tuyilum KaNNA pAl maNakkum vAyoDu (Cinnam)

 

caraNam

iDaiyil paTTuDutti KaNgaLil mai tITTi

saDaiyil mayiR pIliyum taDamArbil padakkamum

naDaiyil oyiluDan nATTiyam A……Di

KODaiyil nizalena en manam kuLira (Cinnam)

 

நீலமணி/மனோலயம்   ரூபகம்  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

04.12.2009      மதராஸ்     14.35 Hrs. (திருத்தப்பட்ட நாள்: 15th November 2015)

 

பல்லவி

சின்னம் சிறு பதம் வைத்து என்னகத்தே வருவாயோ?

கன்னம் குழியச் சிரித்து அருளாயோ உன்?  (சின்னம்)

 

அ. பல்லவி

காலில் சிலம்பொலிக்கத் தோளில் மாலை அசைய

ஆலிலை துயிலும் கண்ணா பால் மணக்கும் வாயொடு (சின்னம்)

 

சரணம்

இடையில் பட்டுடுத்தி கண்களில் மை தீட்டி

சடையில் மயிற் பீலியும் தடமார்பில் பதக்கமும்

நடையில் ஒயிலுடன் நாட்டியம் ஆ…..டி

கோடையில் நிழலென என் மனம் குளிர (சின்னம்)

sakti umai bAlA

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , , , , , , , , on May 22, 2011 by Melody

One of the songs that impressed me in my younger days is Bharathiyar’s “cinnam ciRu kiLiyE” rendered by DKP in rAgamAlikai. Even though the later singers changed the rAgams, the original one sung by DKP still impresses me. This inspired me to use those rAgams to compose a song on my ishTa deyvam Murugan as follows:

YouTube link:  http://www.youtube.com/watch?v=eKjodeIaxzU

rAgamAlikai       rUpakam (tisra Ekam)       Nagpur Srinivasan

09.09.1964 Nagpur 12.05 PM (Modified on 20.05.2011)

KhamAs

sakti umai bAlA oLirum sakti migum vElA

mukti tarum sIlA en vinai tIrka varum mUlA

kApi

kovvaikkani vAyil sindiDum punnagaikaNDiDavE

avvaikkaruL seydha Pazhani paramporuLE vA

SimmEndramadyamam

tAviyaNaittE ennuLLat tApattai tIrttiDa vA

Avi piriyum munnE un darisanam tandiDa vA

huSEni

Pongipperugum anbinAl aravaNaikkavE vA

angamellAm cilirkkum azhagE ennarasE murugA

aTANA

ERka manamillaiyO en muRai sevitanil vizhavillaiyO

un manam kallO shaNmukA en mElirakkam vallaiyO (sakti)

ராகமாலிகை   ரூபகம் (திச்ர ஏகம்)   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

09.09.1964 நாகபுரி 12.05 PM (திருத்தப்பட்ட நாள்: 20.05.2011)

கமாஸ்

சக்தி உமை பாலா ஒளிரும் சக்தி மிகும் வேலா

முக்தி தரும் சீலா என் வினை தீர்க்க வரும் மூலா

காபி

கொவ்வைக்கனி வாயில் சிந்திடும் புன்னகைகண்டிடவே

அவ்வைக்கருள் செய்த பழனி பரம்பொருளே வா

ஸிம்மேந்த்ரமத்யமம்

தாவியணைத்தே என்னுள்ளத் தாபத்தை தீர்த்திட வா

ஆவி பிரியும் முன்னே உன் தரிசனம் தந்திட வா

ஹுஸேனி

பொங்கிப்பெருகும் அன்பினால் அரவணைக்கவே வா

அங்கமெல்லாம் சிலிர்க்கும் அழகே என்னரசே முருகா

அடாணா

ஏற்க மனமில்லையோ என் முறை செவிதனில் விழவில்லையோ

உன் மனம் கல்லோ ஷண்முகா என் மேலிரக்கம் வல்லையோ (சக்தி)

%d bloggers like this: