Archive for Rama

nenjil vAzhum BhuvanEshwariyE

Posted in Bhuvaneshwari with tags , , , , , , , , , , , , , , , on October 4, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=VQvKpKk16rA 

 

BhAgEshwari   rUpakam    Nagpur Srinivasan

20.07.1965 Calcutta 09.00AM (Modified on: 03.10.2011)

Pallavi

nenjil vAzhum BhuvanEshwariyE

bhaktar tozhudu Ettum mAyE (nenjil)

saraNam

PancAkshara pITattilE amarndiDum parAtpari

Parindu vandemai Adari vANi ramaiyum pORRiDum

MahishASura mardhaniyE (nenjil)

OnkAranAda rUpiNiyE sAntaSwarUpi sankariyE

IsaniDa BhAgEshwari nADum anbar uLLam kuLira

punnagai vIsum dEviyE (nenjil)

KAmEsarin KAmAkshiyE KAsivisAlAkshiyE

Cokkar magizhum MInAkshiyE

KAlam kaDandu vArAmalE kaDugi vandu kAttiDu (nenjil)

பாகேஷ்வரி ரூபகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன் 

20.07.1965 கல்கத்தா 09.00AM (திருத்தப்பட்ட நாள்: 03.10.2011)

பல்லவி

நெஞ்சில் வாழும் புவனேஷ்வரியே

பக்தர் தொழுது ஏத்தும் மாயே (நெஞ்சில்)

சரணம்

01. பஞ்சாக்ஷர பீடத்திலே அமர்ந்திடும் பராத்பரி

பரிந்து வந்தெமை ஆதரி வாணி ரமையும் போற்றிடும்

மஹிஷாஸுரமர்தனியே (நெஞ்சில்)

02. ஓங்கார நாத ரூபிணியே சாந்த ஸ்வரூபி சங்கரியே

ஈசனிட பாகேஷ்வரி நாடும் அன்பர் உள்ளம் குளிர

புன்னகை வீசும் தேவியே (நெஞ்சில்)

03. காமேசரின் காமாக்ஷியே காசிவிசாலாக்ஷியே

சொக்கர் மகிழும் மீனாக்ஷியே

காலம் கடந்து வாராமலே கடுகி வந்து காத்திடு (நெஞ்சில்)

ennuyir kiLiyE

Posted in Raman with tags , , , , , , , , , , , , , , on July 2, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=cb44KNMH0ks 

SimmEndramadyamam       Adi       Nagpur Srinivasan

23.02.1965 Nagpur 06.45 PM (Modified on: 29.06.2011)

Pallavi

ennuyir kiLiyE nI enakkaka  

viNNuyarap paRandu selvAyA (ennuyir)

a. pallavi

annai JAnakikku aranin villoDittu

tannaik koDutta KalyANarAmaniDam (ennuyir)

saraNam

tennavan lankEsanai mAytta ayOddi

mannavan rAmanai azhaittu varuvAyA

immaiyin iDargaL nIkkiyaruLi

maRumaiyil avanaDi sErttiDavE (ennuyir)

 

ஸிம்மேந்த்ரமத்யமம்   ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன் 

23.02.1965   நாகபுரி 06.45 PM   (திருத்தப்பட்ட நாள்:29.06.2011)

பல்லவி

என்னுயிர் கிளியே நீ எனக்காக 

விண்ணுயரப் பறந்து செல்வாயா? (என்னுயிர்)

அ. பல்லவி

அன்னை ஜானகிக்கு அரனின் வில்லொடித்து

தன்னைக் கொடுத்த கல்யாணராமனிடம் (என்னுயிர்)

சரணம்

தென்னவன் லங்கேசனை மாய்த்த அயோத்தி

மன்னவன் ராமனை அழைத்து வருவாயா?

இம்மையின் இடர்கள் நீக்கியருளி

மறுமையில் அவனடி சேர்த்திடவே (என்னுயிர்)

%d bloggers like this: