YouTube link: https://youtu.be/aQxqjKm1fEE
https://www.youtube.com/watch?v=aQxqjKm1fEE&feature=youtu.be
MukhArI rUpakam Nagpur Srinivasan
10.07.2017 Madras 08.45PM (Modified on:16.12.2017 )
Pallavi
taruNam idu nalla taruNam
tamiyEn enaik kAttaruLa (taruNam)
anu Pallavi
un padam nAn paNindEn sharaNam ena
enakku irangi gati tara vENum ammA (taruNam)
CaraNam
aranin pAdi umaiyE azhagil muzhu matiyE
ambhikaiyE kANak kiDaikkavoNNA nidhiyE
KAraNa kArya vinA viDaiyum nIyE
nAraNiyE nallOrait tAngum dhAraNiyE (taruNam)
முகாரி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்
10.07.2017 மதராஸ் 08.45PM (திருத்தப்பட்ட நாள்: 16.12.2017)
பல்லவி
தருணம் இது நல்ல தருணம்
தமியேன் எனைக் காத்தருள (தருணம்)
அ. பல்லவி
உன் பதம் நான் பணிந்தேன் ஷரணம் என
எனக்கு இரங்கி கதி தர வேணும் அம்மா (தருணம்)
சரணம்
அரனின் பாதி உமையே அழகில் முழு மதியே
அம்பிகையே காணக் கிடைக்கவொண்ணா நிதியே
காரண கார்ய வினா விடையும் நீயே
நாரணியே நல்லோரைத் தாங்கும் தாரணியே (தருணம்)