Archive for Lord Shiva

ADum paramporuLE

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on December 19, 2013 by Melody

YouTube link:   http://youtu.be/x2AvwPRWQd4

dEva manOhari   Adi   Nagpur Srinivasan

12.10.2008 Madras 11.55 AM (Modified on: 02.12.2013)

 

Pallavi

ADum param….poruLE- kanaka sabai

tannil poR padam tUkkiyE (ADum)

 

a. pallavi

nADiDum nallavarai…… naRpadam aLittuc

cADiDum pEraiyum – tan vazi Irtti….Da (ADum)

 

CaraNam

BakhtargaLaik kAkka A…lam uNDavanE…  

aruntavam cey uLattil kuDiyiruppOnE..

taddimi tOm ena uDukkai olittiDa…..

Om Om OmenRu an..bar muzhangiDa.. (ADum)

 

தேவ மனோஹரி   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

12.10.2008 மதராஸ் 11.55 AM (திருத்தப்பட்ட நாள்: 02.12.2013)

 

பல்லவி

ஆ…டும் பரம்…பொருளே- கனக சபை

தன்னில்,  பொற் பதம் தூக்கியே (ஆ…டும்)

 

அ. பல்லவி

நாடிடும் நல்லவரை…… நற்பதம் அளித்துச்

சாடிடும் பேரையும் – தன் வழி ஈர்த்தி…ட (ஆ…டும்)

 

சரணம்

பக்தர்களைக் காக்க ஆ…லம் உண்டவனே…  

அருந்தவம் செய் உளத்தில் குடியிருப்போனே..

தத்திமி தோம் என உடுக்கை ஒலித்திட…..

ஓம் ஓம் ஓமென்று அன்…பர் முழங்கிட… (ஆ…டும்)

Kayilai vASanE

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on March 9, 2013 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=XhkEEwmK_1Y  

 

 

BhAvAni  rUpakam Nagpur Srinivasan

07.02.1999 Madras 09.00AM (Modified on:02.03.1013)

 

Pallavi

 

Kayilai vASanE Kanaka SabEsanE

kai viDalAgumA BhavAni priyanE? (Kayilai)

 

a. pallavi

 

candrasEkaranE kaDFaikkaN pAr Sakala jIvAdAranE

tamiyEn enakku vazhiyaruLum acintyanE …… (Kayilai)

 

caraNam

 

BhArgavanE pAmarargaL bhajittiDum SarvEsanE

IsanE emaikkAttu rakshikkum EkAksharanE

GaurinAtanE madiyaNinda sankaranE sivanE

Mayilai uRai kapAli KAsi vishvEshwa..ra..nE (Kayilai)

 

பவானி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

07.02.1999 மதராஸ்  09.00AM (திருத்தப்பட்ட நாள்: 02.03.1013)

 

பல்லவி

 

கயிலை வாஸனே கனக ஸபேசனே

கை விடலாகுமா பவானி ப்ரியனே ?  (கயிலை)

 

அ. பல்லவி

 

சந்த்ரசேகரனே கடைக்கண் பார்  ஸகல ஜீவாதாரனே

தமியேன் எனக்கு வழியருளும் அசிந்த்யனே……… (கயிலை)

 

சரணம்

 

பார்கவனே பாமரர்கள் பஜித்திடும் ஸர்வேசனே

ஈசனே எமைக்காத்து ரக்ஷிக்கும் ஏகாக்ஷரனே

கௌரிநாதனே மதியணிந்த சங்கரனே சிவனே

மயிலை உறை கபாலி காசி விஷ்வேஷ்வ..ர..னே (கயிலை)

ATkoLLa unaiyanRi yAr

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on March 24, 2012 by Melody

 

YouTube link: http://youtu.be/e4BvwaSN4CA

dEvagAndAri rUpakam Nagpur Srinivasan

08.08.1974 Waltair 2.30 PM (Modified on: 21.03.2012)

 

 

Pallavi

 

ATkoLLa unaiyanRi yAr varuvAr? taDuttu 

ATkoLLum pemmAnE ennai (ATkoLLa)

 

a. pallavi

 

Ponnambalaththu uRai arasE ennarasE….

vATTiDum tuyarinai OTTiyaruL seydu (ATkoLLa)

 

caraNam

 

PATTinil crutiyAy layamAypparaviDum

pancabUthapporuLE………

KARRinil, oliyil prapancamuzhudum

praNavAkAramAy niRainda mudalE

ETTinil ezuttAy eNNattil uNarvil

uRaindiDum karupporuLE…….

KUTTinil uyirAy siramadil matiyAy

anbE uruvAy paraviDum paramA (ATkoLLa)

 

 

தேவகாந்தாரி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

08.08.1974 வால்டேர் 2.30 PM (திருத்தப்பட்ட நாள்: 21.03.2012)

 

பல்லவி

 

ஆட்கொள்ள உனையன்றி யார் வருவார்? தடுத்து 

ஆட்கொள்ளும் பெம்மானே என்னை (ஆட்கொள்ள)

 

அ. பல்லவி

 

பொன்னம்பலத்து உறை அரசே என்னரசே….

வாட்டிடும் துயரினை ஓட்டியருள் செய்து (ஆட்கொள்ள)

சரணம்

 

பாட்டினில் ச்ருதியாய் லயமாய்ப்பரவிடும்

பஞ்சபூதப்பொருளே………

காற்றினில், ஒலியில் ப்ரபஞ்சமுழுதும்

ப்ரணவாகாரமாய் நிறைந்த முதலே

ஏட்டினில் எழுத்தாய் எண்ணத்தில் உணர்வில்

உறைந்திடும் கருப்பொருளே…….

கூட்டினில் உயிராய் சிரமதில் மதியாய்

அன்பே உருவாய் பரவிடும் பரமா (ஆட்கொள்ள)

 

ADum ambaramE

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on February 8, 2012 by Melody

YouTube link: http://youtu.be/_dlrLZyDSZM 

 

 

 

 

 

 

KaraharapriyA rUpakam Nagpur Srinivasan

12.01.1973 Calcutta Time 10.55 PM (Modified on: 07.02.2012)

 

 

Pallavi

 

ambaramE …………..

ADum ambaramE …………….

SabhApati ADum ambaramE ……….

Kanaka SabhApati ADum tillai CidambaramE…………

Kanaka SabhApati taddIm dIm dImena (ADum)

tarita jam jam jam takiTa jam jam ena (ADum)

tadaritaritajam takiTa jam takiTa jam tadingiNatOmena (ADum)

Kanaka SabhApati uDukkai oliyuDan (ADum)

 

a. pallavi

 

nADiDum aDiyAr kUttinaikkANak

kUDiDumpOdu iDadu padam tUkki (ADum)

 

caraNam

 

tumburu nArada dEva gaNangaL

nandiyuDan sErndu tALamiDa

emperumAnaik kai kUppittudittu

Sanaka SanAdiyarum mAniDarum magizha (ADum)

 

 

 

கரஹரப்ரியா ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

12.01.1973 கல்கத்தா 10.55 PM (திருத்தப்பட்ட நாள்: 07.02.2012)

 

 

பல்லவி

அம்பரமே …………..

ஆடும் அம்பரமே …………….

ஸபாபதி ஆடும் அம்பரமே ……….

கனக ஸபாபதி ஆடும் தில்லை சிதம்பரமே………………

கனக ஸபாபதி தத்தீம் தீம் தீமென (ஆடும்)

தரித ஜம் ஜம் ஜம் தகிட ஜம் ஜம் என (ஆடும்)

ததரிதரிதஜம் தகிட ஜம் தகிட ஜம் ததிங்கிணதோமென (ஆடும்)

கனக ஸபாபதி உடுக்கை ஒலியுடன் (ஆடும்)

அ. பல்லவி

நாடிடும் அடியார் கூத்தினைக்காணக்

கூடிடும்போது இடது பதம் தூக்கி (ஆடும்)

சரணம்

தும்புரு நாரத தேவ கணங்கள்

நந்தியுடன் சேர்ந்து தாளமிட

எம்பெருமானைக் கை கூப்பித்துதித்து

ஸனக ஸனாதியரும் மானிடரும் மகிழ (ஆடும்)

tiruvaDi uRu tuNaiyE

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on December 23, 2011 by Melody

YouTube link: http://youtu.be/6s9kKlw2nyk

 

KEdAragauLai  rUpakam  Nagpur Srinivasan

22.06.1969 Calcutta 03.30PM (Modified on: 22.12.2011)

 

Pallavi

tiruvaDi uRu tuNaiyE evarkkum

piRavippiNi  tIra nal vazi kATTum un (tiruvaDi)

a. pallavi

KavalaiyellAm nIkkum karuNai vaDivE

Kayilaiyil uRaiyum Kanaka SabhApati un (tiruvaDi)

saraNam

nidam inda mAyA ulaginilE ……nAn

vida vidamAgavE uzhanRiDumpOdu

sadam nAn kAN enRu ambalamADiDum 

Cidambara vASA sivagAmi nEsA (tiruvaDi)

 

கேதாரகௌளை ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.06.2011 கல்கத்தா 03.30PM (திருத்தப்பட்ட நாள்: 22.12.2011)

 

பல்லவி

திருவடி உறு துணையே எவர்க்கும்

பிறவிப்பிணி தீர நல் வழி காட்டும் உன் (திருவடி)

. பல்லவி

கவலையெல்லாம் நீக்கும் கருணை வடிவே

கயிலையில் உறையும் கனக ஸபாபதி உன் (திருவடி)

சரணம்

நிதம் இந்த மாயா உலகினிலே …..நான்

வித விதமாகவே உழன்றிடும்போது

சதம் நான் காண் என்று அம்பலமாடிடும் 

சிதம்பர வாஸா சிவகாமி நேசா உன் (திருவடி) 

ilAnum iruppAnum (vruttam)

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , , , on December 8, 2011 by Melody

The vruttam was composed keeping in mind the famous songs of Lord Shiva KAla KAlan (AtANa), KANakkaN KOTi vENDum (KAmbOdi) and KapAli (MOhanam). You can sing the vruttam in any other rAgam to suit a song of Lord Shiva in that rAgam.

YouTube link: http://youtu.be/cQTATGi1yVo

rAgamAlikai (Vruttam) Nagpur Srinivasan

22.03.1967 Calcutta 02.15PM (Modified on: 29.11.2011)

aTANA

ilAnum iruppAnum solAnum

solAl siRandAnum kallAgik kaLippAgi

kAttaruLum kaniyanumAna en sivanE

KAlanukku KAlanE KAla KAlanE

KAmbOdi

cittelAm ceyvAnum pittanAyt tirivAnum

muttamizh vittaganum mUvaril oruvanum

pattarkkirangum pEyar talaivanE en sivanE

unaik KANakkaN kOTi vENDum KapAli

MOhanam

mAyam seyvAnum nEyam koNDavanum

tAyAgic cEyAm enaik kAppAnum mana

nOyuRRavarkku nal marundAnavanum

pAsattaik kaLaindu  piRavippiNi nIkkum en sivanE

KapAli KapAli KapAli

ராகமாலிகை (வ்ருத்தம்)  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.03.1967 கல்கத்தா 02.15PM (திருத்தப்பட்ட நாள்: 29.11.2011)

அடாணா

இலானும் இருப்பானும் சொலானும்

சொலால் சிறந்தானும் கல்லாகிக் களிப்பாகி

காத்தருளும் கனியனுமான என் சிவனே

காலனுக்குக் காலனே கால காலனே

காம்போதி

சித்தெலாம் செய்வானும் பித்தனாய்த் திரிவானும்

முத்தமிழ் வித்தகனும் மூவரில் ஒருவனும்

பத்தர்க்கிரங்கும் பேயர் தலைவனே என் சிவனே

உனைக் காணக்கண் கோடி வேண்டும் கபாலி 

மோஹனம்

மாயம் செய்வானும் நேயம் கொண்டவனும்

தாயாகிச் சேயாம் எனைக் காப்பானும் மன

நோயுற்றவர்க்கு நல் மருந்தானவனும்

பாசத்தைக் களைந்து பிறவிப்பிணி நீக்கும் என் சிவனே

கபாலி கபாலி கபாலி

unaiyanRi vERu gati

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , , , , on November 22, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=r3cqrJyC0GQ   

 

 

tODi Adi  Nagpur Srinivasan

22.06.1969 Calcutta 09.45PM (Modified on: 20.11.2011)

 

Pallavi

 

unaiyanRi vERu gatiyEdu?  

enaikkAttaruLa ivvulaginilE (unaiyanRi )


a. pallavi

 

KaRpakAmbikaiyuDan Mayilaiyil uRaindiDum

KaRpagattaruvE KapA………lIswara….nE (unaiyanRi)

 

saraNam

 

aNu aNuvAy enaik kavalaigaL sUzha

ARRaluDan en vidiyum tAkka

kaNam tavaRAmal ninaittiDumpOdu

manamirangi en tunbattai OTTiDa (unaiyanRi )

 

 

தோடி  ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

22.06.1969 கல்கத்தா 09.45PM (திருத்தப்பட்ட நாள்: 20.11.2011)

 

பல்லவி

 

உனையன்றி வேறு கதியேது?  

எனைக்காத்தருள இவ்வுலகினிலே (உனையன்றி )


அ. பல்லவி

 

கற்பகாம்பிகையுடன் மயிலையில் உறைந்திடும்

கற்பகத்தருவே கபா……..லீச்வர….னே (உனையன்றி)

 

சரணம்

 

அணு அணுவாய் எனைக் கவலைகள் சூழ

ஆற்றலுடன் என் விதியும் தாக்க

கணம் தவறாமல் நினைத்திடும்போது

மனமிரங்கி என் துன்பத்தை ஓட்டிட (உனையன்றி )


%d bloggers like this: