Archive for Lord Krushna

KaN mun vA

Posted in KrushNan with tags , , , , , , , , , , , , , , , , , on June 1, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=vL9EIEWU3cQ 

rAgamAlikai        rUpakam       Nagpur Srinivasan

18.07.1964 Nagpur 12.45 PM (Modified on: 29.05.2011)

JOnpuri

Pallavi

KaN mun vA kamalakkaNNAyen

KArmEga vaNNA kamSa niSUdanA (kaN)

anupallavi

KauStubha hAram mArbinil tulanga

KaStUri tilakam neRRiyil ilanga (kaN)

MOhanakalyANi

KAnagamengum nin vEynguzhal nAdam

KAdil kETTE mayangi ninREn nAn

Kavaca kuNDalam asaiya mAyanE vA vA

MOhana kalyANa rUpanE nI (kaN)

BEhAg

MAdavA MadhuSUdanA kaNNA

YAdava kula tilakA mukundA

Adi mUlamE Azhi mazhaikkaNNA

arumaRai tEDum AraNapporuLE (kaN)

 

ராகமாலிகை   ரூபகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

18.07.1964   நாகபுரி 12.45 PM (திருத்தப்பட்ட நாள்: 29.05.2011)

ஜோன்புரி

பல்லவி

கண் முன் வா கமலக்கண்ணாயென்

கார்மேக வண்ணா கம்ஸ நிஸூதனா (கண்)

அனுபல்லவி

கௌஸ்துப ஹாரம் மார்பினில் துலங்க

கஸ்தூரி திலகம் நெற்றியில் இலங்க (கண்)

மோஹனகல்யாணி

கானகமெங்கும் நின் வேய்ங்குழல் நாதம்

காதில் கேட்டே மயங்கி நின்றேன் நான்

கவச குண்டலம் அசைய மாயனே வா வா

மோஹன கல்யாண ரூபனே நீ (கண்)

பேஹாக்

மாதவா மதுஸூதனா கண்ணா

யாதவ குல திலகா முகுந்தா

ஆதி மூலமே ஆழி மழைக்கண்ணா

அருமறை தேடும் ஆரணப்பொருளே (கண்)

Advertisements

KrushNAvatAranaDi

Posted in KrushNan with tags , , , , , , , , , , , , , , , , , , , on May 25, 2011 by Melody

This composition is based on the KiLikkaNNi on KAvaDiccindu meTTu and suits well for Kummi.

YouTube link:  http://www.youtube.com/watch?v=8nvI0zjnzMY

cencuruTTi       Adi      Nagpur Srinivasan

03.11.1964 Nagpur 06.25 AM (Modified on: 23.05.2011)

1. KrushNAvatAranaDi KamSa SamhAranaDi

kArmEga vaNNanaDi KiLiyE KAkka varuvAnaDi KiLiyE

2. dEvaki BAlanaDi gOpiyar nAdanaDi

tEninum iniyanaDi KiLiyE dwArakai mannanaDi KiLiyE

3. Ayar kulattavanDi Anirai kAttiDavE

GOvardana giriyai KiLiyE kuDaiyAyp piDittAnaDi KiLiyE

4. PArttanukku sAradiyAyp pOril irundavanDi

PAr pugazh GItai tanai KiLiyE aruLiya KaNNanaDi KiLiyE

5. nandagOpan yasOdai kumaranAy GOkulattil

vaLarndu mAyam seydAnaDi KiLiyE vaSudEvan maindanaDi KiLiyE

6. JAlam seydu rukmiNiyai kaippiDitta kaLvanaDi

rAdhai maNALanaDi KiLiyE Satya BAmAvin nAdanaDi KiLiyE

7. vENugAnattAlavan bhuvanam muzhuvadaiyum

MayakkiyE ninRAnaDi KiLiyE malaimagaL aNNanaDi KiLiyE

8. SrI ranganAdanaDi vEdattaikkAttavanDi

AdarittALa nammai KiLiyE anjali seyvOmaDi KiLiyE

 

 

செஞ்சுருட்டி   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

03.11.1964    நாகபுரி 06.25 AM (திருத்தப்பட்ட நாள்: 23.05.2011)

1. க்ருஷ்ணாவதாரனடி கம்ஸ ஸம்ஹாரனடி

கார்மேக வண்ணனடி கிளியே காக்க வருவானடி கிளியே

2. தேவகி பாலனடி கோபியர் நாதனடி

தேனினும் இனியனடி கிளியே த்வாரகை மன்னனடி கிளியே

3. ஆயர் குலத்தவன்டி ஆநிரை காத்திடவே

கோவர்தன கிரியை கிளியே குடையாய்ப் பிடித்தானடி கிளியே

4. பார்த்தனுக்கு சாரதியாய்ப் போரில் இருந்தவன்டி

பார் புகழ் கீதை தனை கிளியே அருளிய கண்ணனடி கிளியே

5. நந்தகோபன் யசோதை குமரனாய் கோகுலத்தில்

வளர்ந்து மாயம் செய்தானடி கிளியே வஸுதேவன் மைந்தனடி கிளியே

6. ஜாலம் செய்து ருக்மிணியை கைப்பிடித்த கள்வனடி

ராதை மணாளனடி கிளியே ஸத்ய பாமாவின் நாதனடி கிளியே

7. வேணுகானத்தாலவன் புவனம் முழுவதையும்

மயக்கியே நின்றானடி கிளியே மலைமகள் அண்ணனடி கிளியே

8. ஸ்ரீ ரங்கநாதனடி வேதத்தைக்காத்தவன்டி

ஆதரித்தாள நம்மை கிளியே அஞ்சலி செய்வோமடி கிளியே

%d bloggers like this: