https://www.youtube.com/watch?v=mG9575mqI60&feature=youtu.be
KEdAragauLai Adi Nagpur Srinivasan
01.10.2012 Madras 07.24 PM (Modified on: 27.01.2018)
Pallavi
VaruvAyena nAn nambinEn taruvE
traruvAy darisanam tandenai ATkoLLa (VaruvAy)
anu pallavi
uruvAy, uNarvAy ennuL uRaibavanE
MaRaivAy irundenai nal vazhi naDatta (VaruvAy)
caraNam
ParivAy aNaikkum tAyinai pOl nAn
Paridavitta pOdu enai aNaittavanE
siRiyEn sey pizhai yAvum poRuttuk
KarimukhA vazhi mEl vizhi vaittu nI (VaruvAy)
கேதாரகௌளை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
01.10.2012 மதராஸ் 07.24 PM (திருத்தப்பட்ட நாள்: 27.01.2018)
பல்லவி
வருவாயென நான் நம்பினேன் தருவே
தருவாய் தரிசனம் தந்தெனை ஆட்கொள்ள (வருவாய்)
அனு பல்லவி
உருவாய், உணர்வாய் என்னுள் உறைபவனே
மறைவாய் இருந்தெனை நல் வழி நடத்த (வருவாய்)
சரணம்
பரிவாய் அணைக்கும் தாயினை போல் நான்
பரிதவித்த போது எனை அணைத்தவனே
சிறியேன் செய் பிழை யாவும் பொறுத்துக்
கரிமுகா வழி மேல் விழி வைத்து நீ (வருவாய்)