Archive for Kapali

KaruNai illaiyA

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , , , on May 27, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=j4K3ykqyYcc  

aTANA       Adi       Nagpur Srinivasan

10.06.1964 Nagpur 04.05 PM (Modified on: 26.05.2011)

Pallavi

KaruNai illaiyA KapAli en mEl

unakku irakkam vallaiyA nenjil (KaruNai)

a. pallavi

unaiyanRi gati enakku yAraiyyA

uRRa tuNai enakkuvErevarayyA (KaruNai)

saraNam

anRum inRum enRum nI tAnaiyyA en

ammai appan enRu nambinEnaiyyA

mukkaN koNDennaip pArumaiyyA en

mun janma vinaiyellAm tIrumaiyyA (KaruNai)

tillai manRuLLE ninRu kUttADum

ellaiyilAp paramporuLE nAn

uDal melindu naDai taLarndu mika

allaluRRu perum thollaiyuRRa pinnum (KaruNai)

அடாணா  ஆதி  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

10.06.1964 நாகபுரி 04.05 PM  (திருத்தப்பட்ட நாள்: 25.05.2011)

பல்லவி

கருணை இல்லையா கபாலி என் மேல்

உனக்கு இரக்கம் வல்லையா நெஞ்சில் (கருணை)

அ. பல்லவி

உனையன்றி கதி எனக்கு யாரைய்யா

உற்ற துணை எனக்குவேரெவரய்யா (கருணை)

சரணங்கள்

அன்றும் இன்றும் என்றும் நீ தானைய்யா என்

அம்மை அப்பன் என்று நம்பினேனைய்யா

முக்கண் கொண்டென்னைப் பாருமைய்யா என்

முன் ஜன்ம வினையெல்லாம் தீருமைய்யா (கருணை)

தில்லை மன்றுள்ளே நின்று கூத்தாடும்

எல்லையிலாப் பரம்பொருளே நான்

உடல் மெலிந்து நடை தளர்ந்து மிக

அல்லலுற்று பெரும் தொல்லையுற்ற பின்னும் (கருணை)

Isanaittudi manamE

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , , , on April 27, 2011 by Melody

This is based on the song my mother used to sing in 1950s, in my childhood, which starts as “tAyE SrI lalitAmbhA”. This will be posted much later in this blog, after I complete my present commitment.

 

YouTube link: http://www.youtube.com/watch?v=-Ef1gqLFiOc

khamAs           Adi       Nagpur Srinivasan

08.01.1964 Nagpur 03.30 PM (Modified on 26.04.2011)

pallavi

Isanaittudi manamE anudinamum (Isanai)

 

caraNam


kalikAlaththilE oru kaNkaNDa deyvamAy

karuNaiyuDan aNaittu kaDaiththERRum kapAli (Isanai)

 

manitAbhimAnamillA makkaL vAzum jagattil

aru marundu pOlE ennai ATkoLLa vanda (JagadIsanai)  

 

SanakAdi munigaLum, dEvargaL mAniDar kANa

Kanaka SabEsanAy kAl tUkki ADiya (Isanai)

கமாஸ்            ஆதி        நாகபுரி ஸ்ரீனிவாஸன்

08.01.1964 நாகபுரி 03.30 PM      (திருத்தப்பட்ட நாள்  26.04.2011)

பல்லவி

ஈசனைத்துதி மனமே அனுதினமும் (ஈசனை)

 

சரணம்

கலிகாலத்திலே ஒரு கண்கண்ட தெய்வமாய்

கருணையுடன் அணைத்து கடைத்தேற்றும் கபாலி (ஈசனை)

 

மனிதாபிமானமில்லா மக்கள் வாழும் ஜகத்தில்

அருமருந்து போலே என்னை ஆட்கொள்ள வந்த (ஜகதீசனை)

 

ஸனகாதி முனிகளும், தேவர்கள் மானிடர் காண

கனக சபேசனாய் கால் தூக்கி ஆடிய (ஈசனை)

 


 

%d bloggers like this: