Archive for Goddess Ambikai

ambA para dEvatE

Posted in ambikai with tags , , , , , , , , , , , , , , on January 6, 2012 by Melody

YouTube link: http://youtu.be/NqKRDom5RDs

 

 

 

 

VaSantA rUpakam Nagpur Srinivasan

31.08.1970 Calcutta 06.00 AM (Modified on: 05.01.2012)

 

 

Pallavi

 

ambA para dEvatE vANi ramA pORRum

nAnmaRai tEDiDum (ambA)

 

a. pallavi

 

aNDacarAcaram engum vyAbittu

akhilANDa kOTi uyirgaLai rakshikkum (ambA)

 

saraNam

 

Parabrumma chAyE bhakta manOhariyE….

ParandAman sOdariyE Paramanin ranjaniyE

PaDamuDiyAdini nAN paTTa tuyaram pOdum

vENDEn inip piRavi vEgamAY vandaruL (ambA)

 

 

வஸந்தா ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

31.08.1970 கல்கத்தா 06.00 AM (திருத்தப்பட்ட நாள்: 05.01.2012)

பல்லவி

அம்பா பர தேவதே வாணி ரமா போற்றும்

நான்மறை தேடிடும் (அம்பா)

. பல்லவி

அண்டசராசரம் எங்கும் வ்யாபித்து

அகிலாண்ட கோடி உயிர்களை ரக்ஷிக்கும் (அம்பா)

சரணம்

பரப்ரும்ம சாயே பக்த மனோஹரியே….

பரந்தாமன் சோதரியே பரமனின் ரஞ்சனியே

படமுடியாதினி நான் பட்ட துயரம் போதும்

வேண்டேன் இனிப் பிறவி வேகமாய் வந்தருள் (அம்பா)

en tAyE un cEy allavO?

Posted in ambikai with tags , , , , , , , , , , , , , , on January 5, 2012 by Melody

YouTube link: http://youtu.be/iO8_jvjrZ7k

 

 

 

 

ParaS Adi Nagpur Srinivasan

30.08.1970 Calcutta 11.45PM (Modified on: 03.01.2012)

 

 

Pallavi

 

en tAyE un cEy allavO?

enai nIyE veRukkalAmO?  

 

saraNam

 

01. vAyARappADukinREn

vazhi aRiYAmal mayangukinREn

MAyan SahOdariyE!

aDiyEnait taLLalAgumO?  

 

02. KollUr MUkAmbikaiyE – tiru

AnaikkA IshwariyE…..

MA Madurai MInAkshiyE

KaDaikkaNNAl rakshikka nI vA

 

03. KanyA paramEshwari

KaRpakAmbikai nI allavO?

ellAm valla ennammaiyE

enai mITTu vAzhvaruL ammA

 

 

பரஸ் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

30.08.1970 கல்கத்தா 11.45PM (திருத்தப்பட்ட நாள்: 03.01.2012)

 

பல்லவி

என் தாயே உன் சேய் அல்லவோ?

எனை நீயே வெறுக்கலாமோ?  

சரணம்

01. வாயாறப்பாடுகின்றேன்

வழி அறியாமல் மயங்குகின்றேன்

மாயன் ஸஹோதரியே!

அடியேனைத் தள்ளலாகுமோ?  

02. கொல்லூர் மூகாம்பிகையே – திரு

ஆனைக்கா ஈஷ்வரியே…..

மா மதுரை மீனாக்ஷியே

கடைக்கண்ணால் ரக்ஷிக்க நீ வா

03. கன்யா பரமேஷ்வரி

கற்பகாம்பிகை நீ அல்லவோ?

எல்லாம் வல்ல என்னம்மையே

எனை மீட்டு வாழ்வருள் அம்மா

%d bloggers like this: