Archive for Eshwaran

uLLamenum kOyilil dEvanE

Posted in Shivan with tags , , , , , , , , , on August 7, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=7G66UT2_YTc 

 

BehAg       rUpakam       Nagpur Srinivasan

02.10.1965    Calcutta     08.45 PM (Modified on: 05.08.2011)

 

Pallavi

uLLamenum kOyilil dEvanE

pUjippEn unai IsanE en nEsanE (uLLamenum)

a. pallavi

KaLLam niRainda kaliyugam idanil

KaTTiyaNaittenaik kATTiDavE (uLLamenum)

saraNam

piRavippiNiyagaRRip paramanE undan

pAdAravindattil sErttiDavE

mAsumaruvaRRa mAmaNiyE perum

tEsuDaiya pemmAnE aruLALa (uLLamenum)

 

 

பெஹாக்     ரூபகம்     நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

02.10.1965     கல்கத்தா       08.45 PM   (திருத்தப்பட்ட நாள்: 05.08.2011)

 

பல்லவி

உள்ளமெனும் கோயிலில் தேவனே

பூஜிப்பேன் உனை ஈசனே என் நேசனே (உள்ளமெனும்)

அ. பல்லவி

கள்ளம் நிறைந்த கலியுகம் இதனில்

கட்டியணைத்தெனைக் காத்திடவே (உள்ளமெனும்)

சரணம்

பிறவிப்பிணியகற்றிப் பரமனே உந்தன்

பாதாரவிந்தத்தில் சேர்த்திடவே

மாசுமருவற்ற மாமணியே பெரும்

தேசுடைய பெம்மானே அருளாளா (உள்ளமெனும்)

divya darisanam

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , , , , , , , on June 27, 2011 by Melody

 

YouTube link: http://www.youtube.com/watch?v=b7_0Nw4XfqE 

 

kApi        rUpakam      Nagpur Srinivasan

06.04.1965 Nagpur 05.45 AM (Modified on: 18.06.2011)

 

Pallavi

divya darisanam taralAgAdA (2)

IsA en munnE un (divya)

a. pallavi

PArvati nAtanE parama daYALanE

Bhaktar paNiyum haranE

en pApangaL pOkki bhayam tanai nIkki

kAttiDa varugalAgAdA

IsA en munnE un (divya)

saraNam

dEvar magizhndhiDa kandanait tandAy

pArOr pORRiDum paranE

KAsi vishvEshA kAruNyavASA

KEdAra nAtA mahEshA

IsA en munnE un (divya)

 

 

காபி  ரூபகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

06.04.1965 நாகபுரி 05.45 AM   (திருத்தப்பட்ட நாள்: 18.06.2011)

 

பல்லவி

திவ்ய தரிசனம் தரலாகாதா (2)

ஈசா என் முன்னே உன் (திவ்ய)

அ. பல்லவி

பார்வதி நாதனே பரம தயாளனே

பக்தர் பணியும் ஹரனே

என் பாபங்கள் போக்கி பயம் தனை நீக்கி

காத்திட வருகலாகாதா

ஈசா என் முன்னே உன் (திவ்ய)

சரணம்

தேவர் மகிழ்ந்திட கந்தனைத் தந்தாய்

பாரோர் போற்றிடும் பரனே

காசி விஷ்வேஷா காருண்யவாஸா

கேதார நாதா மஹேஷா

ஈசா என் முன்னே உன் (திவ்ய)

%d bloggers like this: