Archive for Amrutavarshini

oru taram avanai

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , on January 4, 2012 by Melody

 

YouTube link: http://youtu.be/mnlk4Q9A-44

 

 

 

amrutavarshiNi Adi Nagpur Srinivasan

22.07.1970 Calcutta 05.00AM (Modified on: 03.01.2012)

 

 

Pallavi

 

oru taram avanai ninaindhiDa un

valvinai yAvum poDippoDiyAgum (oru)

 

a. pallavi

 

Muruganai manadil ninaindu viTTAl

iDargaL vilagum magizhcci perugum (oru)

 

saraNam

 

01. aDiyAr tuyar yAvum aRavE ozhiyum

MuDiyAp piRavi muRRum tolaiyum

viDiyA vAzhvum viDindu viLangum

paDiyA manamum paNidu aDangum (oru)

 

02. PorundA guNangaL porundi ninRiDumE

PollAppiNi nIngi uDal sugam peRumE

MurugA MurugA MurugA ena nI

urugik karaindu kaNNIr perukki (oru)

 

 

 

அம்ருதவர்ஷிணி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.07.1970 கல்கத்தா 05.00AM (திருத்தப்பட்ட நாள்: 03.01.2012)

 

 

பல்லவி

 

ஒரு தரம் அவனை நினைந்திட உன்

வல்வினை யாவும் பொடிப் பொடியாகும் (ஒரு)

அ. பல்லவி

முருகனை மனதில் நினைந்து விட்டால்

இடர்கள் விலகும் மகிழ்ச்சி பெருகும் (ஒரு)

சரணம்

01. அடியார் துயர் யாவும் அறவே ஒழியும்

முடியாப் பிறவி முற்றும் தொலையும்

விடியா வாழ்வும் விடிந்து விளங்கும்

படியா மனமும் பணிந்து அடங்கும் (ஒரு)

02. பொருந்தா குணங்கள் பொருந்தி நின்றிடுமே

பொல்லாப்பிணி நீங்கி உடல் சுகம் பெறுமே

முருகா முருகா முருகா என நீ

உருகிக் கரைந்து கண்ணீர் பெருக்கி (ஒரு)

vEgam niRainda ulagamidil

Posted in Murugan with tags , , , , , , , , , , , , , , , , , , , , , on September 20, 2011 by Melody

YouTube link:  http://www.youtube.com/watch?v=YVaJdO99pDc

rAgamAlikai        Adi      Nagpur Srinivasan

04.08.1966 Calcutta 9.00PM (Modified on: 18.09.2011)

Pallavi

KIravANi

vEgam niRainda ulagamidil – nAn

unaimaRandu ODikkaLaittEn (vEgam)

a. pallavi

ADiya ATTam tEDiya poruL edilum

manamadu sellAdun ninaivAgi ninREn (vEgam)

saraNam

KEdAragauLai

KandA murugA unaiyanRi vERu

gati uNDO? idai nI maRandu ninRAyO?

GnAniyar tEDum karupporuLE kadir

kAmam uRaiyum KaruNai vaDivE –

[vEgam niRainda ulagamidil

unaiyanRi vERu gati uNDO?]

amrutavarshiNi

Mayilinil vArAyO? darisanam tanden

tAbattait tIrAyO? tuLittuLiyAy tuDikkum

uLLattin tuyaraip pOkkiDa suDar vElEndi

PArvati bAlA Pazhanimalai vElA viraindODi

[vEgam niRainda ulagamidil Mayilinil vArAyO?] 

HamSanAdam

KaliyilE kaNkaNDa deyvam nI KumarA

Malai thanai viTTu ennaik kAttiDa vENDum

silaiyAy ninRAl tIrumA en tuyaram? idai

uNarndum murugA tayakkam koLvadEnO?

[vEgam niRainda ulagamidil kaNkaNDa deyvam nI]

BImplAS

vidiyinai mARRa vallavanE azhagA

isaiyenum innamudaip paDaitiDuvEn nAn

nAda rUpamE nAnmaRai pORRum

nAn vaNangum nAyakanE vA

[vEgam niRainda ulagamidil vidiyinai mARRa vallavanE]

 

ராகமாலிகை   ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்   

04.08.1966 கல்கத்தா 9.00PM (திருத்தப்பட்ட நாள்: 18.09.2011)

பல்லவி

கீரவாணி

வேகம் நிறைந்த உலகமிதில் – நான்

உனைமறந்து ஓடிக்களைத்தேன் (வேகம்)

. பல்லவி

ஆடிய ஆட்டம் தேடிய பொருள் எதிலும்

மனமது செல்லாதுன் நினைவாகி நின்றேன் (வேகம்)

சரணம்

கேதாரகௌளை

கந்தா முருகா உனையன்றி வேறு

கதி உண்டோ? இதை நீ மறந்து நின்றாயோ?

ஞானியர் தேடும் கருப்பொருளே கதிர்

காமம் உறையும் கருணை வடிவே –

[வேகம் நிறைந்த உலகமிதில் உனையன்றி வேறு கதி உண்டோ?]

அம்ருதவர்ஷிணி

மயிலினில் வாராயோ? தரிசனம் தந்தென்

தாபத்தைத் தீராயோ? துளித்துளியாய் துடிக்கும்

உள்ளத்தின் துயரைப் போக்கிட சுடர் வேலேந்தி

பார்வதி பாலா பழனிமலை வேலா விரைந்தோடி

[வேகம் நிறைந்த உலகமிதில் மயிலினில் வாராயோ?]  

ஹம்ஸநாதம்

கலியிலே கண்கண்ட தெய்வம் நீ குமரா

மலை தனை விட்டு என்னைக் காத்திட வேண்டும்

சிலையாய் நின்றால் தீருமா என் துயரம்? இதை

உணர்ந்தும் முருகா தயக்கம் கொள்வதேனோ?

[வேகம் நிறைந்த உலகமிதில் கண்கண்ட தெய்வம் நீ]

பீம்ப்லாஸ்

விதியினை மாற்ற வல்லவனே அழகா

இசையெனும் இன்னமுதைப் படைத்திடுவேன் நான்

நாத ரூபமே நான்மறை போற்றும்

நான் வணங்கும் நாயகனே வா

[வேகம் நிறைந்த உலகமிதில் விதியினை மாற்ற வல்லவனே]

%d bloggers like this: