Archive for the The Almighty Category

KaDavuL onRE uru pala Ayinum

Posted in The Almighty with tags , , , , , , , , , , , , , , on May 31, 2018 by Melody

YouTube link: https://www.youtube.com/watch?v=gIhh-xjY8BQ&feature=youtu.be  

aTANA       Adi       Nagpur Srinivasan

12.11.2013 Madras Time 07.45 AM (Modified on: 27.05.2018)

 

Pallavi

KaDavuL onRE uru pala Ayinum

iru vinaigaL nIkkip pEraruL tarum (KaDavuL)

anu pallavi

MUvulagEttum nAn maRai navilum

nallOr vaNangum paramporuL aduvE (KaDavuL)

caraNam

ainkaranum aduvE aRumukhanum aduvE

Ezhu swarangaLil pADappaDuvadum aduvE  

ashTamA Siddhiyum navanidhiyum aduvE

dasha indriyangaLai ALvadum aduvE (KaDavuL)

 

அடாணா   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

12.11.2013 மதராஸ் நேரம் 07.45 AM (திருத்தப்பட்ட நாள்: 27.05.2018)

பல்லவி

கடவுள் ஒன்றே உரு பல ஆயினும்

இரு வினைகள் நீக்கிப் பேரருள் தரும் (கடவுள்)

அனு பல்லவி

மூவுலகேத்தும் நான் மறை நவிலும்

நல்லோர் வணங்கும் பரம்பொருள் அதுவே (கடவுள்)

சரணம்

ஐங்கரனும் அதுவே அறுமுகனும் அதுவே

ஏழு ஸ்வரங்களில் பாடப்படுவதும் அதுவே   

அஷ்டமா ஸித்தியும் நவநிதியும் அதுவே

தஷ இந்த்ரியங்களை ஆள்வதும் அதுவே (கடவுள்)

Advertisements

cindanai ceydiDuvAy nI

Posted in The Almighty with tags , , , , , , , , , , , , , , on March 15, 2013 by Melody

YouTube link:  http://youtu.be/_X3LqE2vfg4

http://www.youtube.com/watch?v=_X3LqE2vfg4&feature=youtu.be 

 

 

tilang Adi Nagpur Srinivasan

26.12.2003 Madras 11.45 PM (Modified on: 12.03.2013)

 

Pallavi

 

cindanai ceydiDuvAy nI immaiyil

siRakkavum maRumai aRRirukkavum (cindanai)

 

a. pallavi

 

vanadanai seydu vazhipaDuvAy

undanai ATkoNDu aruLum KaDavuLai  (cindanai)

 

caraNam

 

angingenAdapaDi engum parviDum

tangum iDam yAvum kadiroLi parappiDum

pongum mangaLam vAzhvil aruLiDum

KaruttileTTAk karuvai kaNamEnum maRavAmal (cindanai)

 

 

திலங்  ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

26.12.2003 மதராஸ் 11.45 PM (திருத்தப்பட்ட நாள்: 12.03.2013)

 

பல்லவி

 

சிந்தனை செய்திடுவாய் நீ இம்மையில்

சிறக்கவும் மறுமை அற்றிருக்கவும் (சிந்தனை)

 

அ. பல்லவி

 

வந்தனை செய்து வழிபடுவாய்  நாளும்

உந்தனை ஆட்கொண்டு அருளும் கடவுளை  (சிந்தனை)

 

சரணம்

 

அங்கிங்கெனாதபடி எங்கும் பரவிடும்

தங்கும் இடம் யாவும் கதிரொளி பரப்பிடும்

பொங்கும் மங்களம் வாழ்வில் அருளிடும்

கருத்திலெட்டாக் கருவை கணமேனும் மறவாமல் (சிந்தனை)

PadAmbujam paRRi

Posted in The Almighty with tags , , , , , , , , , , , , , , on February 26, 2013 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=_OIKjJjJ5Fc   

 

ahIrbhairavi Adi  Nagpur Srinivasan

05.02.1999 Madras 07.00 AM (Modified on: 17.02.2013)

 

Pallavi

 

PadAmbujam paRRip paNindEn un

KarAmbujam aLittu kaDaittERRa VA (PadAmbujam)

 

a. pallavi

 

MukhAmbujattil karuNai kATTum

VilOcanAmbujam koNDavanE tirup (PadAmbujam)

caraNam

 

peRRa tAyin pAsam pozhivAy nI

uRRa tandaiyin anbum kATTuvAy

kaRRa nallaRivuDan vazhi nadattum guruvE

aRRa kuLappaRavai nAn tavikkiREn vA (PadAmbujam)

ஆஹிர்பைரவி  ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

05.02.1999 மதராஸ் 07.00 AM (திருத்தப்பட்ட நாள்: 17.02.2013)

 

பல்லவி

 

பதாம்புஜம் பற்றிப் பணிந்தேன் உன்

கராம்புஜம் அளித்து கடைத்தேற்ற வா (பதாம்புஜம்)

 

அ. பல்லவி

 

முகாம்புஜத்தில் கருணை காட்டும்

விலோசனாம்புஜம் கொண்டவனே திருப் (பதாம்புஜம்)

 

சரணம்

 

பெற்ற தாயின் பாசம் பொழிவாய் நீ

உற்ற தந்தையின் அன்பும் காட்டுவாய்

கற்ற நல்லறிவுடன் வழி நடத்தும் குருவே

அற்ற குளப்பறவை  நான் தவிக்கிறேன் வா (பதாம்புஜம்)

Anandam koL manamE

Posted in The Almighty with tags , , , , , , , , , , , , , , on January 20, 2012 by Melody

YouTube link: http://youtu.be/V6ar8dE41BY   

 

 

 

 

varALi  Adi Nagpur Srinivasan

13.11.1971 Calcutta 12.10 PM (Modified on: 19.01.2012)

 

 

Pallavi

 

Anandam koL manamE (PErAnandam)

anburuvAnavanai ninaindu dinamE (Anandam)

 

a. pallavi

 

POna vinaigaLai…. eNNiyE urugi

Ana payanenna? idai  uNaRndu (Anandam)

 

saraNam

 

eNNum ezhuttumAnavanai  

maNNum viNNum Anavanai

PaNNum isaiyum koNDu

naNNum aDiyArkkaruLbavanai eNNi (Anandam)

 

 

வராளி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

13.11.1971 கல்கத்தா 12.10 PM (திருத்தப்பட்ட நாள்: 19.01.2012)

 

 

பல்லவி

ஆனந்தம் கொள் மனமே (பேரானந்தம்)

அன்புருவானவனை நினைந்து தினமே (ஆனந்தம்)

அ. பல்லவி

போன வினைகளை…. எண்ணியே உருகி

ஆன பயனென்ன? இதைஉணர்ந்து (ஆனந்தம்)

சரணம்

எண்ணும் எழுத்துமானவனை 

மண்ணும் விண்ணும் ஆனவனை

பண்ணும் இசையும் கொண்டு

நண்ணும் அடியார்க்கருள்பவனை எண்ணி (ஆனந்தம்)

vEdanaiyil varundi

Posted in The Almighty with tags , , , , , , , , , , , , , , , on December 30, 2011 by Melody

YouTube link: http://youtu.be/S-h8Ccw6Kcg   

 

 

 

 

MukhAri Adi Nagpur Srinivasan

04.01.1970 Calcutta 10.15AM (Modified on: 29.12.2011)

 

 

Pallavi

 

vEdanaiyil varundi vADlAmO? 

sOdanai tALumO ini en manam (vEdanai)

 

a. pallavi

 

endaiyum tAyum Ana uruvE un

tALinaip paRRinEn enait taLLalAmO? (vEdanai)

 

saraNam

 

pApaccumai enai maruTTiYE turatta

pAzhum vinai enait toDarndu viraTTa

ODuginREn iruLil vazhi aRiyAmal

vIDupERaLikka nI varum varaiyil (vEdanai)

 

 

முகாரி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

04.01.1970 கல்கத்தா 10.15AM (திருத்தப்பட்ட நாள்: 29.12.2011)

 

பல்லவி

வேதனையில் வருந்தி வாடலாமோ?  

சோதனை தாளுமோ இனி என் மனம் (வேதனை)

. பல்லவி

எந்தையும் தாயும் ஆன உருவே உன்

தாளினைப் பற்றினேன் எனைத் தள்ளலாமோ? (வேதனை)

சரணம்

பாபச்சுமை எனை மருட்டியே துரத்த

பாழும் வினை எனைத் தொடர்ந்து விரட்ட

ஓடுகின்றேன் இருளில் வழி அறியாமல்

வீடுபேறளிக்க நீ வரும் வரையில் (வேதனை)

%d bloggers like this: