Archive for the Shivan Category

innam Or piRavi tALEnaiyA

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on March 22, 2017 by Melody

YouTube link:  https://youtu.be/CunxNC2klNs

https://www.youtube.com/watch?v=CunxNC2klNs&feature=youtu.be

Saraswati ManoharI   rUpakam    Nagpur Srinivasan

10.10.2011 Madras 6.15 AM (Modified on: 07.03.2017)

 

Pallavi

innam Or piRavi tALEnaiyA

ennaip paDaitta ammaiyappA (innam)

anu pallavi

munnam ennai taDuttATkoLvEnenRa

pinnum vArAmal pOnadaRiya (innam)

caraNam   

anbE uruvAna Ala vAyanE

tunbuRum enait taLLalAgumO?

nAraikku mukti tanda nAthanE– un

pErai maRavA enaik kai viDalAmO? (innam)

 

ஸரஸ்வதீ மனோஹரீ   ரூபகம்   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

10.10.2011 மதராஸ் 6.15 AM   (திருத்தப்பட்ட நாள்: 07.03.2017)

 

பல்லவி

இன்னம் ஓர் பிறவி தாளேனையா

என்னைப் படைத்த அம்மையப்பா (இன்னம்)

அனுபல்லவி

முன்னம் என்னை தடுத்தாட்கொள்வேனென்ற

பின்னும் வாராமல் போனதறிய  (இன்னம்)

சரணம் 

அன்பே உருவான ஆல வாயனே

துன்புறும் எனை நீ தள்ளலாகுமோ?

நாரைக்கு முக்தி தந்த நாதனே உன்

பேரை மறவா எனைக் கை விடலாமோ? (இன்னம்)

nenjam niRaindavanE en

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on August 19, 2016 by Melody

Introduction: I was inspired by this rAgam, similar to our MOhanam since my childhood after hearing two famous songs ‘GanshyAma SundarA’ (Amar bhupali) and ‘JyOti kalash’ (Bhabhi ki chudiyan). My desire to compose a song similar to these is fulfilled and the song is: ‘nenjam niRaindavanE’ given below.

 

YouTube link:  https://youtu.be/OuyiHr1naqs

https://www.youtube.com/watch?v=OuyiHr1naqs&feature=youtu.be

 

 

BhUpAli   MishracApu       Nagpur Srinivasan

4.6.2011 Madras 12.36PM (Modified on: 07.08.2016)

 

Pallavi

nenjam niRaindavanE en …… (nenjam)

a.pallavi

nanju uNDAy nAnilam tazhaikka

panca bhUtangaL vaNangum nI……..(nenjam)

CaraNam 

tanjam enbOrai anjElenRu  

vinjum anbinAl kAkkum iRaivA

kenjum enaip pArAy………… un

kanja malarp padam tunjum en (nenjam)

 

பூபாலி   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

4.6.2011 மதராஸ் நேரம் 12.36PM (திருத்தப்பட்ட நாள்: 07.08.2016)

 

பல்லவி

நெஞ்சம் நிறைந்தவனே என் …… (நெஞ்சம்)

அனுபல்லவி

நஞ்சு உண்டாய் நானிலம் தழைக்க

பஞ்ச பூதங்கள் வணங்கும் நீ……..(நெஞ்சம்)

சரணம் 

தஞ்சம் என்போரை அஞ்சேலென்று  

விஞ்சும் அன்பினால் காக்கும் இறைவா

கெஞ்சும் எனைப் பாராய்………… உன்

கஞ்ச மலர்ப் பதம் துஞ்சும் என் (நெஞ்சம்)

ADum paramporuLE

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on December 19, 2013 by Melody

YouTube link:   http://youtu.be/x2AvwPRWQd4

dEva manOhari   Adi   Nagpur Srinivasan

12.10.2008 Madras 11.55 AM (Modified on: 02.12.2013)

 

Pallavi

ADum param….poruLE- kanaka sabai

tannil poR padam tUkkiyE (ADum)

 

a. pallavi

nADiDum nallavarai…… naRpadam aLittuc

cADiDum pEraiyum – tan vazi Irtti….Da (ADum)

 

CaraNam

BakhtargaLaik kAkka A…lam uNDavanE…  

aruntavam cey uLattil kuDiyiruppOnE..

taddimi tOm ena uDukkai olittiDa…..

Om Om OmenRu an..bar muzhangiDa.. (ADum)

 

தேவ மனோஹரி   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

12.10.2008 மதராஸ் 11.55 AM (திருத்தப்பட்ட நாள்: 02.12.2013)

 

பல்லவி

ஆ…டும் பரம்…பொருளே- கனக சபை

தன்னில்,  பொற் பதம் தூக்கியே (ஆ…டும்)

 

அ. பல்லவி

நாடிடும் நல்லவரை…… நற்பதம் அளித்துச்

சாடிடும் பேரையும் – தன் வழி ஈர்த்தி…ட (ஆ…டும்)

 

சரணம்

பக்தர்களைக் காக்க ஆ…லம் உண்டவனே…  

அருந்தவம் செய் உளத்தில் குடியிருப்போனே..

தத்திமி தோம் என உடுக்கை ஒலித்திட…..

ஓம் ஓம் ஓமென்று அன்…பர் முழங்கிட… (ஆ…டும்)

Kayilai vASanE

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on March 9, 2013 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=XhkEEwmK_1Y  

 

 

BhAvAni  rUpakam Nagpur Srinivasan

07.02.1999 Madras 09.00AM (Modified on:02.03.1013)

 

Pallavi

 

Kayilai vASanE Kanaka SabEsanE

kai viDalAgumA BhavAni priyanE? (Kayilai)

 

a. pallavi

 

candrasEkaranE kaDFaikkaN pAr Sakala jIvAdAranE

tamiyEn enakku vazhiyaruLum acintyanE …… (Kayilai)

 

caraNam

 

BhArgavanE pAmarargaL bhajittiDum SarvEsanE

IsanE emaikkAttu rakshikkum EkAksharanE

GaurinAtanE madiyaNinda sankaranE sivanE

Mayilai uRai kapAli KAsi vishvEshwa..ra..nE (Kayilai)

 

பவானி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

07.02.1999 மதராஸ்  09.00AM (திருத்தப்பட்ட நாள்: 02.03.1013)

 

பல்லவி

 

கயிலை வாஸனே கனக ஸபேசனே

கை விடலாகுமா பவானி ப்ரியனே ?  (கயிலை)

 

அ. பல்லவி

 

சந்த்ரசேகரனே கடைக்கண் பார்  ஸகல ஜீவாதாரனே

தமியேன் எனக்கு வழியருளும் அசிந்த்யனே……… (கயிலை)

 

சரணம்

 

பார்கவனே பாமரர்கள் பஜித்திடும் ஸர்வேசனே

ஈசனே எமைக்காத்து ரக்ஷிக்கும் ஏகாக்ஷரனே

கௌரிநாதனே மதியணிந்த சங்கரனே சிவனே

மயிலை உறை கபாலி காசி விஷ்வேஷ்வ..ர..னே (கயிலை)

shrutiyODu layattODu pADu

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on February 16, 2013 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=-JiOknO2DUw

 

 

 

PantuvarALi Adi Nagpur Srinivasan

14.09.1997 Madras 08.00 PM (Modified on: 10.02.2013)

 

 

Pallavi

 

crutiyODu layattODu pADu para

gati peRavE.. avan padattinai nADu (cruti)

 

a. pallavi

 

matiyaNiyum viri ….saDaiyanai eNNi

patiyiRciRanda…. Cidambaranai nI (cruti)

 

caraNam

 

Alam uNDa Ala..vAyan KAla..kAlan

amudIsan anbar nADiDum nEsan

Anandak kUttADum ambalavA..Nan

aravAbharaNan angayaRkaNNi nAdanai (cruti)

 

 

பந்துவராளி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

14.09.1997 மதராஸ் 08.00 PM (திருத்தப்பட்ட நாள்: 10.02.2013)

 

 

பல்லவி

 

ச்ருதியோடு லயத்தோடு பாடு பர

கதி பெறவே.. அவன் பதத்தினை நாடு (ச்ருதி)

 

அ. பல்லவி

 

மதியணியும் விரி …சடையனை எண்ணி

பதியிற்சிறந்த…. சிதம்பரனை நீ (ச்ருதி)

 

சரணம்

 

ஆலம் உண்ட ஆல..வாயன் கால..காலன்

அமுதீசன் அன்பர் நாடிடும் நேசன்

ஆனந்தக் கூத்தாடும் அம்பலவா..ணன்

அரவாபரணன் அங்கயற்கண்ணி நாதனை (ச்ருதி)

ammaiyum appanum AnavanE

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on October 13, 2012 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=pWW6NkI_q6k

 

 

vAcaSpati Adi Nagpur Srinivasan

22.04.1994 Madras 02.45PM (Modified on: 09.10.2012)

 

 

 

Pallavi

 

ammaiyum appanum AnavanE iRaivA

immaiyin karai sErkkum kalangarai viLakkE (ammaiyum)

 

a. pallavi

 

uNmaiyin uRavE ulagATTum uruvE

kaNNimaipOlenaik kAttiDum uyirE (ammaiyum)

 

caraNam

 

caRRunnai ninaikka ceyvinaitIrumE

paRRinai viTTiDa paragati kiTTiDumE

naRRuNaiyAy viLangum namaccivAyamE

poRRAL paNindu Ettum enaik kaitUkkiyAL en (ammaiyum)

 

 

 

வாசஸ்பதி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.04.1994 மதராஸ் 02.45PM (திருத்தப்பட்ட நாள்: 09.10.2012)

 

பல்லவி

 

அம்மையும் அப்பனும் ஆனவனே இறைவா

இம்மையின் கரை சேர்க்கும் கலங்கரை விளக்கே (அம்மையும்)

 

அ. பல்லவி

 

உண்மையின் உறவே உலகாட்டும் உருவே

கண்ணிமைபோலெனைக் காத்திடும் உயிரே (அம்மையும்)

 

சரணம்

 

சற்றுன்னை நினைக்க செய்வினைதீருமே

பற்றினை விட்டிட பரகதி கிட்டிடுமே

நற்றுணையாய் விளங்கும் நமச்சிவாயமே

பொற்றாள் பணிந்து ஏத்தும் எனைக் கைதூக்கியாள் என் (அம்மையும்)

 

 

 

ADikkoNDE iruppAr

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on May 28, 2012 by Melody

YouTube link: http://youtu.be/B2XxWuT4B5M 

shyAmA Adi Nagpur Srinivasan

10.11.1981 Vizag 09.05 AM (Modified on: 25.05.2012)

 

 

Pallavi

 

ADikkoNDE iruppAr – mana….

ambalam tannil AnandakkUttu (ADikkoNDE)

 

a. pallavi

 

tEDiDum aDiyAr aRiyAmal avar tam

idayattil toDarndu tan saDai virittE…. (ADikkoNDE)

 

caraNam

 

PancabhUtangaLil nilamAyk kAnciyilE

AnaikkAvinilE teLLiya nIrAy ………….  

vazhi kATTum jOtiyAy aNNAmalaiyinilE

vaLiyAy KALattiyil paraveLiyAy tillaiyil (ADikkoNDE)

 

 

சாமா  ஆதி  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

10.11.1981 விசாகப்பட்டினம் 09.05 AM (திருத்தப்பட்ட நாள்: 25.05.2012)

பல்லவி

 

ஆடிக்கொண்டே இருப்பார் – மன….

அம்பலம் தன்னில் ஆனந்தக்கூத்து (ஆடிக்கொண்டே)

 

அ. பல்லவி

 

தேடிடும் அடியார் அறியாமல் அவர் தம்

இதயத்தில் தொடர்ந்து தன் சடை விரித்தே…. (ஆடிக்கொண்டே)

 

சரணம்

 

பஞ்சபூதங்களில் நிலமாய்க் காஞ்சியிலே

ஆனைக்காவினிலே தெள்ளிய நீராய் ………….  

வழி காட்டும் ஜோதியாய் அண்ணாமலையினிலே

வளியாய் காளத்தியில் பரவெளியாய் தில்லையில் (ஆடிக்கொண்டே)

%d bloggers like this: