Archive for the Shirdi Sai Category

SAi tAn enakku Sakalamum

Posted in Shirdi Sai with tags , , , , , , , , , , , , , , on May 8, 2018 by Melody

YouTube link: https://www.youtube.com/watch?v=ZaSkViK-zoo&feature=youtu.be

Anandabhairavi      Adi     Nagpur Srinivasan

29.10.2012 Madras 09.09 AM (Modified on: 30.04.2018)

Pallavi

SAi tAn enakku Sakalamum ivvulagil

en tAyum, tandaiyum, AsAnum Ishanum shIraDi (SAi)

anu pallavi

agamum puRamum paravi niRpavar avarE en

aRivum gnAnamumumAy niRaindiruppavar avarE (SAi)

CaraNam 

EzhaippangALan dIna dayALan 

tunbuRuvOrkku avarE aDaikkalam

vinAvum avarE viDai tarubavarum avarE

ninaivum avarE nigazvum avarE (SAi)

 

ஆனந்தபைரவி   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

29.10.2012 மதராஸ் 09.09 AM (திருத்தப்பட்ட நாள்:  30.04.2018)

பல்லவி

ஸாயி தான் எனக்கு ஸகலமும் இவ்வுலகில்

என் தாயும், தந்தையும், ஆசானும் ஈசனும் ஷீரடி (ஸாயி)

அனுபல்லவி

அகமும் புறமும் பரவி நிற்பவர் அவரே என்

அறிவும் ஞானமுமுமாய் நிறைந்திருப்பவர் அவரே (ஸாயி)

சரணம் 

ஏழைப்பங்காளன் தீன தயாளன்

துன்புறுவோர்க்கு அவரே அடைக்கலம்

வினாவும் அவரே விடை தருபவரும் அவரே  

நினைவும் அவரே நிகழ்வும் அவரே (ஸாயி)

Advertisements

KaruNaik kaDalE SAyi

Posted in Shirdi Sai with tags , , , , , , , , , , , , , , on January 16, 2013 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=UW8CTnThUpc   

 

 

 

 

 

 

 

nATTaikkuRinji rUpakam Nagpur Srinivasan

22.10.1994 Madras 09.30AM (Modified on: 14.01.2013)

 

Pallavi

 

KaruNaik kaDalE SAyi (perum)

KaDaikkaN pArttaruLa vArIr (KaruNai)

 

a. pallavi

 

IraDi paNivOrai ATkoLLum Isar

sIraDi vAzh nEsar en idhayanivASar (KaruNai)

 

caraNam

 

BhaktargaL pORRiDum paramakrupAnidi

BhaktargaLaik kAttu mARRuvaAr avar vidi

BhaktargaLukkAgavE piRanda dayAnidi

BhaktargaL ninaittiDa aruLvAr naRgati (KaruNai)

 

 

நாட்டைக்குறிஞ்சி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

22.10.1994 மதராஸ் 09.30AM (திருத்தப்பட்ட நாள்: 14.01.2013)

 

 

பல்லவி

 

கருணைக் கடலே ஸாயி (பெரும்)

கடைக்கண் பார்த்தருள வாரீர் (கருணை)

 

அ. பல்லவி

 

ஈரடி பணிவோரை ஆட்கொள்ளும் ஈசர்

சீரடி வாழ் நேசர் என் இதயநிவாஸர் (கருணை)

 

சரணம்

 

பக்தர்கள் போற்றிடும் பரமக்ருபாநிதி

பக்தர்களைக் காத்து மாற்றுவார் அவர் விதி

பக்தர்களுக்காகவே பிறந்த தயாநிதி

பக்தர்கள் நினைத்திட அருள்வார் நற்கதி (கருணை)

SAyinAtA SrI SAyinAtA

Posted in Shirdi Sai with tags , , , , , , , , , , , , , , on October 18, 2012 by Melody

YouTube link: http://youtu.be/68Hurw2KXPw

 

MishramAND tisra Ekam Nagpur Srinivasan

24.06.1994 Madras Time 05.00PM (Modified on: 13.10.2012)

 

 

 

Pallavi

 

SAyinAtA SrI SAyinAtA sIraDi vAzhum SrI

dwAraka MA…yi  (SAinAtA)

 

caraNangaL

 

1. Munvinai tolaittiDum tandai SAyi

Pin vinai taDuttiDum annai SAyi

KaNNoLiyAyk kaNNil niRkum SAyi

ViNNavarum paNiyum dEva SAyi (SAyinAtA)

 

2. PaNNil poruLAyp paravum SAyi

MaNNil mAndaraik kAkkum SAyi

nambinabErukku sonda SAyi

nallavargaL nAL tORum vaNangum SAyi (SAyinAtA)

 

3. nAnirukka bayamEn enRa SAyi

nIyirukkak kavalaigaL Edu SAyi?

BhaktargaL tunbattai sumakkum SAyi

avar tam sOrvai nIkki sugattait tarum SAyi (SAyinAtA)

 

4. KaRkaNDu pOlAgum avar nAmam

KANakkiDaikkumO avar uruvam?

KaruNaiyin iruppiDam avaranRi inda

Kaliyil pugal namakku vERevar uNDu? (SAyinAtA)

 

 

 

மிஷ்ரமாண்ட் திஷ்ர ஏகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

24.06.1994  மதராஸ் 05.00PM  (திருத்தப்பட்ட நாள்: 13.10.2012)

 

 

பல்லவி

 

ஸாயிநாதா ஸ்ரீ ஸாயிநாதா சீரடி வாழும் ஸ்ரீ

த்வாரக மா…யி (ஸாயிநாதா)

 

சரணங்கள்

 

1. முன் வினை தொலைக்கும் தந்தை ஸாயி

பின் வினை தடுத்திடும் அன்னை ஸாயி

கண்ணொளியாய்க் கண்ணில் நிற்கும் ஸாயி

விண்ணவரும் பணியும் தேவ ஸாயி (ஸாயிநாதா)

 

2. பண்ணில் பொருளாய்ப் பரவும் ஸாயி

மண்ணில் மாந்தரைக் காக்கும் ஸாயி

நம்பினபேருக்கு சொந்த ஸாயி

நல்லவர்கள் நாள் தோறும் வணங்கும் ஸாயி (ஸாயிநாதா)

 

3. நானிருக்க பயமேன் என்ற ஸாயி

நீயிருக்கக் கவலைகள் ஏது ஸாயி?

பக்தர்கள் துன்பத்தை சுமக்கும் ஸாயி

அவர் தம் சோர்வை நீக்கி சுகத்தைத் தரும் ஸாயி (ஸாயிநாதா)

 

4. கற்கண்டு போலாகும் அவர் நாமம்

காணக்கிடைக்குமோ அவர் உருவம்?

கருணையின் இருப்பிடம் அவரன்றி இந்த

கலியில் புகல் நமக்கு வேறெவர் உண்டு? (ஸாயிநாதா)

%d bloggers like this: