Archive for the General Category

azhaittu varavA SwAmI ?

Posted in General, Music with tags , , , , , , , , , , , , , , on June 16, 2016 by Melody

In my childhood, about 60 plus years back, I heard the caraNam of this JAvaLi but in spite of my best search and contacts, I could not secure this. Hence, I decided to complete it myself with the Pallavi and anu pallavi as below so that till I am able to get, the caraNam would remain intact!

azhaittu varavA SwAmI?

YouTube link:  https://youtu.be/jVJRiXRRGkw

https://www.youtube.com/watch?v=jVJRiXRRGkw&feature=youtu.be

BEgaDA        Adi       Nagpur Srinivasan

29 Nov 2015 Madras 02.25 PM (Modified on: 12th June 2016)

Pallavi

azhaittu varavA SwAmI ?

andi vELai tanai AnandamAyk kazhikka (azhaittu)

anu pallavi

KaRutta kuzaluDaiyAL kavarum nagaiyuDaiyAL

CempavaLa vAyuDaiyAL tEnURum colluDaiyAL (azhaittu)

caraNam

KannamiraNDum mukham pArkkum kaNNADi

Kanaka civanda iDai kArigai KaNNATTi

anna naDaiyazhagi avaL yArkkum tagunda jODi

AraNanguDan Sukham anubavikkalAm kUDi (azhaittu)

பேகடா   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

29 Nov 2015 மதராஸ் 02.25 PM   (திருத்தப்பட்ட நாள்: 12th June 2016)

பல்லவி

அழைத்து வரவா ஸ்வாமீ?

அந்தி வேளை தனை ஆனந்தமாய்க் கழிக்க (அழைத்து)

அ. பல்லவி

கறுத்த குழலுடையாள் கவரும் நகையுடையாள்

செம்பவள வாயுடையாள் தேனூறும் சொல்லுடையாள் (அழைத்து)

சரணம்

கன்னமிரண்டும் முகம் பார்க்கும் கண்ணாடி

கனக சிவந்த இடை காரிகை கண்ணாட்டி

அன்ன நடையழகி அவள் யார்க்கும் தகுந்த ஜோடி

ஆரணங்குடன் ஸுகம் அனுபவிக்கலாம் கூடி (அழைத்து)

anRu mudal inRu varai

Posted in General with tags , , , , , , , , , , , , , , on September 3, 2013 by Melody

YouTube link: http://youtu.be/GNU4QF9Aquw   

 

 

dwijAvanti mishracApu Nagpur Srinivasan

20.12.2006 Madras 07.00 AM (Modified on: 08.08.2013)

 

Pallavi

 

anRu mudal inRu varai

unaiyanRi tuNai yAr.. ammA? (anRu)

 

a. pallavi

 

ninRu tavazhndu naDandu nAn ODa

UnRukOlAnavaLE kaN tiRandu pArammA (anRu)

 

caraNam

 

tAn enRa agandai aRa nI vanda pOdu

paRRinEn undan pAdAravindam

nAn irukkaiyil unakku bayamEdu enRa

vAnuRai tA…yE tavikka viDalAmA? (anRu)

 

த்விஜாவந்தி  மிஷ்ரசாபு  நாகபுரி ஸ்ரீனிவாஸன்

20.12.2006 மதராஸ் நேரம் 07.00 AM (திருத்தப்பட்ட நாள்: 08.08.2013)

 

பல்லவி

 

அன்று முதல் இன்று வரை  

உனையன்றி துணை  யார் .. அம்மா…..? (அன்று)

 

அ. பல்லவி

 

நின்று  தவழ்ந்து நடந்து நான் ஓட

ஊன்றுகோலானவளே கண் திறந்து பாரம்மா (அன்று)

 

சரணம்

 

தான் என்ற அகந்தை அற நீ வந்த போது

பற்றினேன் உந்தன் பாதாரவிந்தம்

நான் இருக்கையில் உனக்கு பயமேது என்ற

வானுறை தா….யே தவிக்க விடலாமா? (அன்று)

nI nilai taDumARAdE

Posted in General with tags , , , , , , , , , , , , , , on February 26, 2012 by Melody

It was when I was a child, my father was impressed upon a song sung by a person seeking alms on the road not only due to its rAgam but also for its philosophical meaning. It was in HindustAn kApi and ran like “kAyA kA pinjarA dOlE rE ek shwAS kA panci bOlE”. He used to sing this thereafter that impressed me very much.  Twenty five years later I composed a song in this tune. It is this song.

YouTube link: http://youtu.be/u6n9CiwXfic


HinduStAn kApi rUpakam Nagpur Srinivasan

29.04.73 Calcutta 07.45 PM (Modified on: 24.02.2012)

Pallavi

nI nilai taDumARAdE …. manamE

summAyiruppadu tAn SukhamE (summA)

a. Pallavi

pAsam vaLarttAy nenjinilE

mOsam pOnapin vADuginRAy gati

mOTcam peRa vazhi onRE tAn (nilai)

caraNam

01. KAsu paNamenRu nAL kazhittAy

Asai koNDu allaluRRAy 

nEsam maRandu uRavizhandAy

KAla muDivil kalangukinRAy (nilai)

02. nErmai ozhittu tImai seydAy

VAymai piRazhndu taDam puraNDAy

uNmaiyilirundu vilagi ninRAy

aNmaiyiliruppadai aRindiDavE (nilai)

ஹிந்துஸ்தான் காபி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

29.04.73 கல்கத்தா 07.45 PM (திருத்தப்பட்ட நாள்: 24.02.2012)

பல்லவி

 

நீ நிலை தடுமாறாதே …. மனமே

சும்மாயிருப்பது தான் ஸுகமே (சும்மா)

 

அ. பல்லவி

 

பாசம் வளர்த்தாய் நெஞ்சினிலே

மோசம் போனபின் வாடுகின்றாய் கதி

மோட்சம் பெற வழி ஒன்றே தான் (நிலை)

 

சரணம்

 

01. காசு பணமென்று நாள் கழித்தாய்

ஆசை கொண்டு அல்லலுற்றாய்  

நேசம் மறந்து உறவிழந்தாய்

கால முடிவில் கலங்குகின்றாய் (நிலை)

 

02. நேர்மை ஒழித்து தீமை செய்தாய்

வாய்மை பிறழ்ந்து தடம் புரண்டாய்

உண்மையிலிருந்து விலகி நின்றாய்

அண்மையிலிருப்பதை அறிந்திடவே (நிலை)

Candra SahOdari shaNmukhapriyE

Posted in General with tags , , , , , , , , , , , , , , , on September 17, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=LD2DUmTtFvM

 

rAgamAlikai        Adi      Nagpur Srinivasan

16.09.2011 Chennai 6.30 PM (Modified on: 17.09.2011)

 

 

shaNmukhapriyA

Pallavi

Candra SahOdari shaNmukhapriyE

SAmrAjya dAyini SarvajanapriyE (candra)

a. pallavi

sentAmarai uRaiyum samudra putriyE

sentamizh pADiDum pulavOr nADiDum (candra)

saraNam

KAnaDA

nalladaic ceydiDum vidipriyE

gnAnadA vINA vAdanapriyE

navarAtri navamiyil nADuvOrkku nal

varamaruLum vAgIshwariyE (nalladai)

MOhanam

Bhagavati PArvatiyE ambA mahA

dEvamanOhari MOhanAngi

BhArgaviyE durgE sivapriyE emaik

kAttiDa vanda JagadIshwariyE (Bhagavati)

ranjani

mahishanai mAytta ranjaniyE- mahA

lakshmiyAy vandu vaLangaLai aruLi

SrI SaraSawatiyAy mUvaril onRAyt

tOnRiya sAradE SakalakalA vANi (mahishanai)

[Candra SahOdari shaNmukhapriyE

nalladaic ceydiDum vidipriyE

Bhagavati PArvatiyE ambA 

mahishanai mAytta ranjaniyE]

 

 

ராக மாலிகை   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

16.09.2011 சென்னை 6.30 PM (திருத்தப்பட்ட நாள்: 17.09.2011)

 

ஷண்முகப்ரியா

பல்லவி

சந்த்ர ஸஹோதரி ஷண்முகப்ரியே

ஸாம்ராஜ்ய தாயினி ஸர்வஜனப்ரியே (சந்த்ர)

அ. பல்லவி

செந்தாமரை உறையும் சமுத்ர புத்ரியே

செந்தமிழ் பாடிடும் புலவோர் நாடிடும் (சந்த்ர)

சரணம்

கானடா

நல்லதைச் செய்திடும் விதிப்ரியே

ஞானதா வீணா வாதனப்ரியே

நவராத்ரி நவமியில் நாடுவோர்க்கு நல்

வரமருளும் வாகீஷ்வரியே (நல்லதை)

மோஹனம்

பகவதி பார்வதியே அம்பா மஹா

தேவமனோஹரி மோஹனாங்கி

பார்கவியே துர்கே சிவப்ரியே எமைக்

காத்திட வந்த ஜகதீஷ்வரியே (பகவதி)

ரஞ்சனி

மஹிஷனை மாய்த்த ரஞ்சனியே- மஹா

லக்ஷ்மியாய் வந்து வளங்களை அருளி

ஸ்ரீ ஸரஸ்வதியாய் மூவரில் ஒன்றாய்த்

தோன்றிய சாரதே ஸகலகலா வாணி (மஹிஷனை)

[சந்த்ர ஸஹோதரி ஷண்முகப்ரியே

நல்லதைச் செய்திடும் விதிப்ரியே

பகவதி பார்வதியே அம்பா 

மஹிஷனை மாய்த்த ரஞ்சனியே]

Van….dadu nam.. vA..zhvil

Posted in General with tags , , , , , , , , on June 29, 2011 by Melody

Examinations were nearing and I was a bit maroused. In order to have inspiration, I used to look at the nature. It was spring season and I found the nature very inspiring. Thus, was born the following song:

 

YouTube link: http://www.youtube.com/watch?v=VZL8oAdrOSY 

 

bEhAg   Adi   Nagpur Srinivasan

13.03.1965 Nagpur 05.00 AM (Modified on: 28.06.2011)

 

Pallavi

Van….dadu nam.. vA..zhvil vaSantam

Inimai niRaittiDa innal agaRRiDa (vandadu)

a. pallavi

tollaiyaganRadu sOgam maRaindadu

muyaRcigaL yAvilum ve..RRi aDaindiDa (vandadu)

saraNam

kUviDum kuyilgaL ADiDum mayilgaL

tAviDum mAngaL ODum siRRODaigaL

pADiDum painkiLigaL olittiDum vaNDinangaL

vAsam mugizhttiDum mala..rgaL tU…viDa (vandadu)

 

 

 

பேஹாக் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

13.03.1965 நாகபுரி 05.00 AM (திருத்தப்பட்ட நாள்: 28.06.2011)


பல்லவி

வந்….தது நம்.. வா..ழ்வில் வஸந்தம்

இனிமை நிறைத்திட இன்னல் அகற்றிட (வந்தது)

அ. பல்லவி

தொல்லையகன்றது சோகம் மறைந்தது   

முயற்சிகள் யாவிலும் வெ..ற்றி அடைந்திட (வந்தது)

சரணம்

கூவிடும் குயில்கள் ஆடிடும் மயில்கள்

தாவிடும் மான்கள் ஓடும் சிற்றோடைகள்

பாடிடும் பைங்கிளிகள் ஒலித்திடும் வண்டினங்கள்

வாசம் முகிழ்த்திடும் மல..ர்கள் தூ…விட (வந்தது)

%d bloggers like this: