Archive for the GaNapati Category

mundai mudalvanE

Posted in GaNapati with tags , , , , , , , , , , , , , , , , , , on July 13, 2012 by Melody

YouTube link: http://youtu.be/V3CD7stN6zo

sankarAbharaNam Adi  Nagpur Srinivasan

29.11.1986 Calcutta Time 02.15 PM (Modified on: 11.07.2012)

 

 

Pallavi

 

mundai mudalvanE muRRum uNarndavanE

vandanai seydunnai vaNanguginREn nAn (mundai)

 

a. pallavi

 

sindanai yAvum semmaiyuRacceyyum

endaiyE sentamizh Ettum iRaivanE (mundai)

 

CaraNam

 

tandai tAyE deyvam enRu paNindavanE

nambina pErukku nalvazhi kATTiDum

ambikai bAlA aruL tara vA viraindun

tumbikkaiyAl aNaittE tuyar tuDaittiDavE (mundai)

 

 

சங்கராபரணம் ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்

29.11.1986 கல்கத்தா 02.15 PM (திருத்தப்பட்ட நாள்: 11.07.2012)

 

பல்லவி

 

முந்தை முதல்வனே முற்றும் உணர்ந்தவனே

வந்தனை செய்துன்னை வணங்குகின்றேன் நான் (முந்தை)

 

அ. பல்லவி

 

சிந்தனை யாவும் செம்மையுறச்செய்யும்

எந்தையே செந்தமிழ் ஏத்தும் இறைவனே (முந்தை)

 

சரணம்

 

தந்தை தாயே தெய்வம் என்று பணிந்தவனே

நம்பின பேருக்கு நல்வழி காட்டிடும்

அம்பிகை பாலா அருள் தர வா விரைந்துன்

தும்பிக்கையால் அணைத்தே துயர் துடைத்திடவே (முந்தை)

Om gam GaNapatiyE

Posted in GaNapati with tags , , , , , , , , , , , , , , on January 7, 2012 by Melody

 

YouTube link: http://youtu.be/Z5NP_HnZ_Tk

 

 

 

 

 

sudhdha danyASi  Adi  Nagpur Srinivasan

17.11.1970 Calcutta 11.15 AM (Modified on: 06.01.2012)

 

 

Pallavi

 

Om gam GaNapatiyE Osaiyin karupporuLE

oru gatiyum illArkku uRutuNaiyAy ninRiDum (Om)

 

a. pallavi

 

Adiyantam illA aruTperum suDarE

nIdi, nErmai, koNDavarkE aruLum (Om)

 

saraNam

 

BAlagaNapatiyAy buddiyaik koDuppAy

Bhuvana patiyAy mUvulagaiyum ALvAy

CaturbhujanAy nAnmaRaigaLaik kAttiDuvAy

EkAksharanAY engumE paravi niRkum (Om)

 

 

 

ராகம் தாளம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

17.11.1970 கல்கத்தா 11.15AM (திருத்தப்பட்ட நாள்: 06.01.2012)

 

பல்லவி

ஓம் கம் கணபதியே ஓசையின் கருப்பொருளே

ஒரு கதியும் இல்லார்க்கு உறுதுணையாய் நின்றிடும் (ஓம்)

அ. பல்லவி

ஆதியந்தம் இல்லா அருட்பெருஞ்சுடரே

நீதி, நேர்மை, கொண்டவர்க்கே அருளும் (ஓம்)

சரணம்

பாலகணபதியாய் புத்தியைக் கொடுப்பாய்

புவன பதியாய் மூவுலகையும் ஆள்வாய்

சதுர்புஜனாய் நான்மறைகளைக் காத்திடுவாய்

ஏகாக்ஷரனாய் எங்குமே பரவி நிற்கும் (ஓம்)

GaNa nAtanE

Posted in GaNapati with tags , , , , , , , , , , , , , , , , , , , on April 24, 2011 by Melody

 

This is the first song I composed on the date, time and place indicated. This was after passing SSLC at Pudukkottai while doing PUC at Nagpur to pursue my graduation.

The song can also be enjoyed through the following YouTube link:

http://www.youtube.com/watch?v=QI83zVoLyrw

 

malayamArutam         Adi       Nagpur Srinivasan

30.06.1961 Nagpur 05.15 AM (Modified on 17.04.2011)

pallavi

gaNanAtanE naRguNasIlanE …………………..

kaNamum unai maRavEn gajamAmukhanE (gaNa)

a pallavi

maNankamazhum malar mAlaiyaNibavanE  

manam kavar nAyakanE en ninaivilenRum vAzhum (gaNa) 

saraNam

paNNisaittuppADi paravasaththuDan thEDi

pankaja malarppAdam thanaiyiraNDinaiyum nADi

anudinam kalitanilEagamum puRamum vADi

alaindiDum Ezhai enaik kAttiDa vA ODi (gaNa)

 

மலயமாருதம்          ஆதி       நாகபுரி ஸ்ரீனிவாஸன்

30.06.1961 நாகபுரி 05.15 AM (திருத்தப்பட்ட நாள்  17.04.2011)

பல்லவி  

கணநாதனே நற்குணசீலனே …………………..

கணமும் உனை மறவேன் கஜமாமுகனே (கண)

அ பல்லவி

மணங்கமழும் மலர் மாலையணிபவனே   

மனம் கவர் நாயகனே என்  நினைவிலென்றும் வாழும் (கண)

சரணம்

பண்ணிசைத்துப்பாடி பரவசத்துடன் தேடி

பங்கஜ மலர்ப்பாதம் தனையிரண்டினையும் நாடி

அனுதினம் கலிதனிலே அகமும் புறமும் வாடி

அலைந்திடும்  ஏழை எனைக் காத்திட வா ஓடி (கண)

Vallabha GaNapati

Posted in GaNapati with tags , , , , , , , , , , , , , , , , , , , , on April 15, 2011 by Melody

I begin my first posting with salutation to Lord GaNapati, the destroyer of all impediments! This song was written on the 14th October 2009 and, of course, is not the first one I wrote. But it was written on the same date  about two years back as such I thought it was apt to begin with this song.

 

This one as well as all other songs posted here will be with Thamizh and English lyrics along with an audio clip. The audio clip will be without adjustment of sruti or tALam but just to provide an outline as to how the song is to be sung. Sangatis, neraval, swaraprastArams etc are left to the singer wishing to sing this song as per her/his manodharmam. Since I am not well versed with the theoretical aspect, no notations are provided.

The song also can be enjoyed through the following YouTube link:

http://www.youtube.com/watch?v=kP92-uJJx4Y

மோஹனம் ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

       சென்னை 14.10.2009   00.06 AM

பல்லவி

வல்லப கணபதி பொற்றாள் பணிந்தேன் நான்

நற்றமிழ், கீதங்கள், பாடிப் போற்றிட (வல்லப)              

அபல்லவி

விக்கினங்கள் யாவும் தீரும் உன்னாலே

நீள் விதியும் அழியும் உன்னருளாலே  (வல்லப)

சரணம்

நன்று தீதுகளை நானறியச்செய்தவா

மன்றுளே ஆடும் நாதனின் தவப்புதல்வா

குன்றமணையும் குமரேசன் சோதரா

நித்தியனே நிமலா பக்தியுடன் பணிவேன் (வல்லப)

mOhanam  Adi  Nagpur Srinivasan

    Chennai 14.10.20  00.06 AM

pallavi

vallabha gaNapati poRRAL paNindEn nAn

naRRamiz, gItangaL, pADip pORRiDa (vallabha)

a.pallavi

vigginangkaL yAvum tIrum unnAlE

nIL vidiyum aziyum unnaruLAlE  (vallabha)

caraNam

nanRu tItugaLai nAnaRiyacceydavA

manRuLE ADum nAdanin tavappudalvA

kunRamaNaiyum kumarEsan sOdarA

nittiyanE nimalA bhaktiyuDan paNivEn (vallabha)


I hope to continue my journey with the support of you all!

%d bloggers like this: