Archive for May, 2018

KaDavuL onRE uru pala Ayinum

Posted in The Almighty with tags , , , , , , , , , , , , , , on May 31, 2018 by Melody

YouTube link: https://www.youtube.com/watch?v=gIhh-xjY8BQ&feature=youtu.be  

aTANA       Adi       Nagpur Srinivasan

12.11.2013 Madras Time 07.45 AM (Modified on: 27.05.2018)

 

Pallavi

KaDavuL onRE uru pala Ayinum

iru vinaigaL nIkkip pEraruL tarum (KaDavuL)

anu pallavi

MUvulagEttum nAn maRai navilum

nallOr vaNangum paramporuL aduvE (KaDavuL)

caraNam

ainkaranum aduvE aRumukhanum aduvE

Ezhu swarangaLil pADappaDuvadum aduvE  

ashTamA Siddhiyum navanidhiyum aduvE

dasha indriyangaLai ALvadum aduvE (KaDavuL)

 

அடாணா   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

12.11.2013 மதராஸ் நேரம் 07.45 AM (திருத்தப்பட்ட நாள்: 27.05.2018)

பல்லவி

கடவுள் ஒன்றே உரு பல ஆயினும்

இரு வினைகள் நீக்கிப் பேரருள் தரும் (கடவுள்)

அனு பல்லவி

மூவுலகேத்தும் நான் மறை நவிலும்

நல்லோர் வணங்கும் பரம்பொருள் அதுவே (கடவுள்)

சரணம்

ஐங்கரனும் அதுவே அறுமுகனும் அதுவே

ஏழு ஸ்வரங்களில் பாடப்படுவதும் அதுவே   

அஷ்டமா ஸித்தியும் நவநிதியும் அதுவே

தஷ இந்த்ரியங்களை ஆள்வதும் அதுவே (கடவுள்)

Advertisements

SAi tAn enakku Sakalamum

Posted in Shirdi Sai with tags , , , , , , , , , , , , , , on May 8, 2018 by Melody

YouTube link: https://www.youtube.com/watch?v=ZaSkViK-zoo&feature=youtu.be

Anandabhairavi      Adi     Nagpur Srinivasan

29.10.2012 Madras 09.09 AM (Modified on: 30.04.2018)

Pallavi

SAi tAn enakku Sakalamum ivvulagil

en tAyum, tandaiyum, AsAnum Ishanum shIraDi (SAi)

anu pallavi

agamum puRamum paravi niRpavar avarE en

aRivum gnAnamumumAy niRaindiruppavar avarE (SAi)

CaraNam 

EzhaippangALan dIna dayALan 

tunbuRuvOrkku avarE aDaikkalam

vinAvum avarE viDai tarubavarum avarE

ninaivum avarE nigazvum avarE (SAi)

 

ஆனந்தபைரவி   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

29.10.2012 மதராஸ் 09.09 AM (திருத்தப்பட்ட நாள்:  30.04.2018)

பல்லவி

ஸாயி தான் எனக்கு ஸகலமும் இவ்வுலகில்

என் தாயும், தந்தையும், ஆசானும் ஈசனும் ஷீரடி (ஸாயி)

அனுபல்லவி

அகமும் புறமும் பரவி நிற்பவர் அவரே என்

அறிவும் ஞானமுமுமாய் நிறைந்திருப்பவர் அவரே (ஸாயி)

சரணம் 

ஏழைப்பங்காளன் தீன தயாளன்

துன்புறுவோர்க்கு அவரே அடைக்கலம்

வினாவும் அவரே விடை தருபவரும் அவரே  

நினைவும் அவரே நிகழ்வும் அவரே (ஸாயி)

%d bloggers like this: