Vara vENDum SaubhAgya lakshmIyE
I had an inner voice calling me to try recasting this wonderful song in Tamil to make the Tamilians understand the meaning since the song is sung during nUtana gruhapravesham, marriage ceremony, Fridays especially during navarAtri and Varalakshmi vratam. With the grace of Goddess, I attempted and following is the result:
https://www.youtube.com/watch?v=gY8DDbMpTPk&feature=youtu.be
SrI/MadhyamAvatI Adi Puranadara dASA’s dEvar nAmA Reset into Tamil by: Nagpur Srinivasan
09.09.2017 Madras 11.15 PM (Modified on:10.09.2017)
Pallavi
Vara vENDum SaubhAgya lakshmIyE
engaL tAyE nI (Vara vENDum)
CaraNangaL
kAlinil aNinda calangai olittiDa
aDimElaDi vaittu vandiDuvAyammA
naRguNamuDaiya periyOr pUjaiyil
kaDaiyum tayiril tiraLum veNNaiyena (Vara vENDum)
engaL viruppangaL niRaivERiDavE
tangattai mazhaiyenap pozhivAyammA
kOTi SUrya prakAsham koNDavaL
Janakanin magaLE ati vEgamuDan (Vara vENDum)
engum pOgAmal bhaktargaL illattil
tangi nitya pUjai utsavamERRu
uNmai uraikkum sAdu SajjanargaLin
Cittattil uRaindiDum tangap padumaiyE (Vara vENDum)
vaNNa vaLaiyalgaL oLirndiDum kaigaLAl
eNNilA selvam aLittiDa vArAy
VEnkaTaramaNan paTTattu rANi
Kunkumam ilangiDum pangayak kaNNi (Vara vENDum)
sarkkaraiyuDan nei mazhaiyenap pozhindiDa
veLLikkizhamai tanil pUjai vELaiyilE
KaruNaikUr mukha azhagiri rangan
mAsaRRa Purandara ViTTalanin rANiyE (Vara vENDum)
புது மனை புகு விழாவிலும், வெள்ளிக்கிழமைகளில், அதுவும் நவராத்ரியிலும், வரலக்ஷ்மீ வ்ரதத்தின் போதும் பெண்கள் தவறாமல் பாடும், தாலி கட்டியவுடன் வாசிக்கப்படும் புரந்தர விட்டலரின் அழகான பாடலைத் தமிழர்கள், பொருளை நன்கு புரிந்து கொண்டு தமிழில் பாட, உள் மனதில் ஒரு குரல் என்னைத் தமிழாக்கம் செய்யும்படி தூண்டியது. அதன் விளைவு கீழ்க் கண்ட பாடல்:
ஸ்ரீ/மத்யமாவதீ ஆதி புரந்தர தாஸர் நாமா தமிழாக்கம்: நாகபுரி ஸ்ரீனிவாஸன்
09.09.2017 மதராஸ் 11.15 PM (திருத்தப்பட்ட நாள்: 10.09.2017)
பல்லவி
வர வேண்டும் ஸௌபாக்ய லக்ஷ்மீயே
எங்கள் தாயே நீ (வர வேண்டும்)
சரணங்கள்
காலினில் அணிந்த சலங்கை ஒலித்திட
அடிமேலடி வைத்து வந்திடுவாயம்மா
நற்குணமுடைய பெரியோர் பூஜையில்
கடையும் தயிரில் திரளும் வெண்ணையென (வர வேண்டும்)
எங்கள் விருப்பங்கள் நிறைவேறிடவே
தங்கத்தை மழையெனப் பொழிவாய் அம்மா
கோடி ஸூர்ய ப்ரகாசம் கொண்டவள்
ஜனகனின் மகளே அதி வேகமுடன் (வர வேண்டும்)
எங்கும் போகாமல் பக்தர்கள் இல்லத்தில்
தங்கி நித்ய பூஜை உத்ஸவமேற்று
உண்மை உரைக்கும் ஸாது ஸஜ்ஜனர்களின்
சித்தத்தில் உறைந்திடும் தங்கப் பதுமையே (வர வேண்டும்)
வண்ண வளையல்கள் ஒளிர்ந்திடும் கைகளால்
எண்ணிலா செல்வம் அளித்திட வாராய்
வேங்கட ரமணன் பட்டத்து ராணி
குங்குமம் இலங்கிடும் பங்கயக் கண்ணி (வர வேண்டும்)
சர்க்கரையுடன் நெய் மழையெனப் பொழிந்திட
வெள்ளிக்கிழமை தனில் பூஜை வேளையிலே
கருணைகூர் முக அழகிரி ரங்கன்
மாசற்ற புரந்தர விட்டலனின் ராணியே (வர வேண்டும்)
This entry was posted on September 12, 2017 at 3:37 pm and is filed under Lakshmi with tags Adi Talam, Bhagyada Lakshmi baramma, Carnatic music, Carnatic song, isai, Lakshmi, South Indian music, Sri/MadhyamAvatI Ragam, Tamil, Tamil isai, Tamil language, Tamil Song, Thamizh, Thamizh isai, Thamizh song. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
Leave a Reply