nI tAn ellAm enRuNarndEn ennuL
YouTube link: http://youtu.be/lxPMtPQIBVk
naTabhairavi Adi Nagpur Srinivasan
02.11.2007 Madras 06.45 AM (Modified on: 01.10.2013)
Pallavi
nI tAn ellAm enRuNarndEn ennuL
tAn azhiyum pOdu aravaNaikka varum (nI tAn)
a. pallavi
AdhAram inRi Or aNuvum asaiyAdu un
pAdAravindam thozhudiDum nAn (nI tAn)
caraNam
dAmadam EnO enai ATkoLLa siva
kAma vallI karuNAkarI – SrI
rA…ma SahOdarI naTabhairavI
SAma gAna priyakarI sankarI (nItAn)
நடபைரவி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
02.11.2007 மதராஸ் 06.45 AM (திருத்தப்பட்ட நாள்: 01.10.2013)
பல்லவி
நீ தான் எல்லாம் என்றுணர்ந்தேன் என்னுள்
தான் அழியும் போது அரவணைக்க வரும் (நீ தான்)
அ. பல்லவி
ஆதாரம் இன்றி ஓர் அணுவும் அசையாது உன்
பாதாரவிந்தம் தொழுதிடும் நான் (நீ தான்)
சரணம்
தாமதம் ஏனோ எனை ஆட்கொள்ள சிவ
காம வல்லீ கருணாகரீ – ஸ்ரீ
ரா…ம ஸஹோதரீ நடபைரவீ
ஸாம கான ப்ரியகரீ சங்கரீ (நீதான்)
Leave a Reply