engum olikkinRadu
YouTube link: http://youtu.be/rzuR9MHVvbk
SuraTi rUpakam Nagpur Srinivasan
21.04.1973 Calcutta 07.45 AM (Modified on: 08.02.2012)
Pallavi
engum olikkinRadu —
Om Om Omena (engum) – ennappan
tangumiDam ellAm Om Om Omena (engum)
a. pallavi
nambum aDiyavarai nAn irukkiREnenRu
sambu kumaranavan aNaikkum tiRan kaNDu (engum)
caraNam
angaiyinaik kATTi Alin kIzhamarnda
Gangai tAngum Isan aRinda Or mandiram
kaNDuNarAmalE andamadil avanai
aNDiya nAnmukhan kaRRa perum mandiram (engum)
ஸுரடி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்
21.04.1973 கல்கத்தா 07.45 AM (திருத்தப்பட்ட நாள்: 08.02.2012)
பல்லவி
எங்கும் ஒலிக்கின்றது —
ஓம் ஓம் ஓமென (எங்கும்) – என்னப்பன்
தங்குமிடம் எல்லாம் ஓம் ஓம் ஓமென (எங்கும்)
அ. பல்லவி
நம்பும் அடியவரை நான் இருக்கிறேனென்று
சம்பு குமரனவன் அணைக்கும் திறன் கண்டு (எங்கும்)
சரணம்
அங்கையினைக் காட்டி ஆலின் கீழமர்ந்த
கங்கை தாங்கும் ஈசன் அறிந்த ஓர் மந்திரம்
கண்டுணராமலே அந்தமதில் அவனை
அண்டிய நான்முகன் கற்ற பெரும் மந்திரம் (எங்கும்)
Leave a Reply