OrARu mukhamum IrARu


YouTube link: http://youtu.be/5wnJxPFmMoM

 

 

rAgamAlikai vruttam  Nagpur Srinivasan

12.11.1966 Calcutta 02.30PM (Modified on: 20.12.2011)

 


hindOLam

 

OrARu mukhamum  IrARu karangaLum

sIrAyt tigazhum tiru mArbum – kaiyil

nErAy ninRiDum kUr vEluDan mayil mIdu

vArAy KumarA  GurubarA en kuRai tIra (oru muRai)


mAND

 

paNNiya pApangaL ettanai ettanai?

muruganai eNNiya nATkaL ettanai?

maNNilE eDutta piRavigaL ettanai?

puNNiyam kiDaikkumO avanai maRandAl?

Aval aDangumO avanaikkANAmal (ARumO)


varALi

 

tIrAppiNiyum mARAkkavalaiyum

nErAkki vaikkum saktiyE kaiyil

kUr vEl tAngi enaik kAkka

pAr pugazhum pazhani malai uRaiyum kandA vA (KA vA vA)


BhAgEshwari

 

kayilai nAtan aruL sakti bAlA

ayilaittAngi mayil mIdamarndu

karuNaiyaip panniru kaNgaLil tEkkik

kanivuDan ennai nOkkinAl pOdum (Malai pOl)

 

sAvEri

 

sendUr mAnagar vA…….zhum kandA vinOdA

endai murugA….. enai ATkoLLalAgAdA?

mundai vinai tIrum muRRiya nOy aRum

orukkAl unnai manadAra dinandORum (MurugA murugA)

 

KarnATaka dEvagAndAri

 

Omennum praNavattai nAnmuganukku connavan

kAmanai eritta paraman vizhippoRiyil vandavan

avuNargaLai vEraRuttu amararaikkAttavan

arumaRai tEDiDum ARumugan VaDivElavan (Kandan)


BrundAvana sArangA

 

ulagaiyALum paraman umaiyAL maganAy

uRuduNaiyAy vazhigATTum vaDivElavanAyk

kAviyaittarittuk kaiyinil daNDamEndik

kaNgaLAl karuNai pozhindu aravaNaikkum  (Kaliyuga)

 

 

 

ராகமாலிகை வ்ருத்தம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்

12.11.1966 கல்கத்தா நேரம் 02.30PM (திருத்தப்பட்ட நாள்: 20.12.2011)


ஹிந்தோளம்

 

ஓராறு முகமும் ஈராறு கரங்களும்

சீராய்த் திகழும் திரு மார்பும் – கையில்

நேராய் நின்றிடும் கூர் வேலுடன் மயில் மீது

வாராய்  குமரா  குருபரா என் குறை தீர

ஒருமுறை எனக்கென வா முருகா

 

மாண்ட்

 

பண்ணிய பாபங்கள் எத்தனை எத்தனை?

முருகனை எண்ணிய நாட்கள் எத்தனை?

மண்ணிலே எடுத்த பிறவிகள் எத்தனை?

புண்ணியம் கிடைக்குமோ அவனை மறந்தால்?

ஆவல் அடங்குமோ அவனைக்காணாமல் (ஆறுமோ)

 

வராளி

 

தீராப்பிணியும் மாறாக்கவலையும்

நேராக்கி வைக்கும் சக்தியே கையில்

கூர் வேல் தாங்கி எனைக் காக்க

பார் புகழும் பழனி மலை உறையும் கந்தா வா (கா வா வா)

 

பாகேஷ்வரி

 

கயிலை நாதன் அருள் சக்தி பாலா

அயிலைத்தாங்கி மயில் மீதமர்ந்து

கருணையைப் பன்னிரு கண்களில் தேக்கிக்

கனிவுடன் என்னை நோக்கினால் போதும் (மலை போல்)


ஸாவேரி

 

செந்தூர் மாநகர் வா…….ழும் கந்தா வினோதா

எந்தை முருகா….. எனை ஆட்கொள்ளலாகாதா?

முந்தை வினை தீரும் முற்றிய நோய் அறும்

ஒருக்கால் உன்னை மனதார தினந்தோறும் (முருகா முருகா)

 

கர்னாடக தேவகாந்தாரி

 

ஓமென்னும் ப்ரணவத்தை நான்முகனுக்கு சொன்னவன்

காமனை எரித்த பரமன் விழிப்பொறியில் வந்தவன்

அவுணர்களை வேரறுத்து அமரரைக்காத்தவன்

அருமறை தேடிடும் ஆறுமுகன் வடிவேலவன் (கந்தன்)

 

ப்ருந்தாவன ஸாரங்கா

 

உலகையாளும் பரமன் உமையாள் மகனாய்

உறுதுணையாய் வழிகாட்டும் வடிவேலவனாய்க்

காவியைத்தரித்துக் கையினில் தண்டமேந்திக்

கண்களால் கருணை பொழிந்து அரவணைக்கும்  (கலியுக)

Leave a comment