unaiyanRi vERu gati
YouTube link: http://www.youtube.com/watch?v=r3cqrJyC0GQ
tODi Adi Nagpur Srinivasan
22.06.1969 Calcutta 09.45PM (Modified on: 20.11.2011)
Pallavi
unaiyanRi vERu gatiyEdu?
enaikkAttaruLa ivvulaginilE (unaiyanRi )
a. pallavi
KaRpakAmbikaiyuDan Mayilaiyil uRaindiDum
KaRpagattaruvE KapA………lIswara….nE (unaiyanRi)
saraNam
aNu aNuvAy enaik kavalaigaL sUzha
ARRaluDan en vidiyum tAkka
kaNam tavaRAmal ninaittiDumpOdu
manamirangi en tunbattai OTTiDa (unaiyanRi )
தோடி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
22.06.1969 கல்கத்தா 09.45PM (திருத்தப்பட்ட நாள்: 20.11.2011)
பல்லவி
உனையன்றி வேறு கதியேது?
எனைக்காத்தருள இவ்வுலகினிலே (உனையன்றி )
அ. பல்லவி
கற்பகாம்பிகையுடன் மயிலையில் உறைந்திடும்
கற்பகத்தருவே கபா……..லீச்வர….னே (உனையன்றி)
சரணம்
அணு அணுவாய் எனைக் கவலைகள் சூழ
ஆற்றலுடன் என் விதியும் தாக்க
கணம் தவறாமல் நினைத்திடும்போது
மனமிரங்கி என் துன்பத்தை ஓட்டிட (உனையன்றி )
Leave a Reply