Archive for October, 2011

kAvaDi eDuppEnaDA

Posted in Murugan with tags , , , , , , , , , on October 21, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=1zj_g0RRYhY 

 

bImplAS  Adi   Nagpur Srinivasan

30.10.1966 Calcutta 05.45AM (Modified on: 22.10.2011)

 

pallavi

kAvaDi eDuppEnaDA murugA un

pAvaDiyai ninaindu pazhani malai tanilE (kAvaDi)

anupallavi

suppanE mayilmEvum appanE vaDi vElA

soppana vAzhvai nAn udaRiDa guruparanE (kAvaDi)

caraNam

piRandamudal nAnunaip pirindaRiyEn

aRindirundhum nI enai maRandanaiyE

aruvamAy unai nI uNarttinai enakku

uruvamAy unaikkANa aRumukhanE (kAvaDi)

 

பீம்ப்லாஸ்     ஆதி     நாகபுரி ஸ்ரீநிவாஸன்    

30.10.1966 கல்கத்தா நேரம் 05.45AM (திருத்தப்பட்ட நாள்: 22.10.2011)

 

பல்லவி

காவடி எடுப்பேனடா முருகா உன்

பாவடியை நினைந்து பழனி மலை தனிலே (காவடி)

அனுபல்லவி

சுப்பனே மயில்மேவும் அப்பனே வடி வேலா

சொப்பன வாழ்வை நான் உதறிட குருபரனே (காவடி)

சரணம்

பிறந்தமுதல் நானுனைப் பிரிந்தறியே ன் 

அறிந்திருந்தும் நீ எனை மறந்தனையே

அருவமாய் உனை நீ உணர்த்தினை எனக்கு

உருவமாய் உனைக்காண அறுமுகனே (காவடி)

mAmEgam pOl karuNai

Posted in Murugan with tags , , , , , , , , on October 18, 2011 by Melody

YouTube link:  http://www.youtube.com/watch?v=2ndr85xB3gA

 

 

The speciality in this composition is that each sentence begins with the letter “MA”.   

tODi   rUpakam   Nagpur Srinivasan

29.10.1966 Calcutta 07.15 AM (Modified on: 15.10.2011)

 

pallavi

mAmEgam pOl karuNai pozhiyum

mAp pazhani mIduRai mA dEvanE  (mAmEgam)

a. pallavi

mAniDaraik kaDaittERRum mA tavamE

mAmunivOr paNi umai bAlA (mAmEgam)

saraNam

mAtanga vadanan sOdaranE

mAmayil vAganA mAl marugA

mA..kayilai nA..tan sat guruvE

mAyai nIkkum mAsilA mAmaNiyE (mAmEgam)

 

இந்தப்பாடலின் விசேஷத்தன்மை இதிலுள்ள வரிகள் ஒவ்வொன்றும் “மா” என்ற எழுத்தில் தொடங்குகின்றது.

தோடி  ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்    

29.10.1966 கல்கத்தா 07.15 AM (திருத்தப்பட்ட நாள்: 15.10.2011)

 

பல்லவி

மாமேகம் போல் கருணை பொழியும்

மாப் பழனி மீதுறை மா தேவனே  (மாமேகம்)

அ. பல்லவி

மானிடரைக் கடைத்தேற்றும் மாதவமே

மாமுனிவோர் பணி உமை பாலா (மாமேகம்)

சரணம்

மாதங்க வதனன் சோதரனே

மாமயில் வாகனா மால் மருகா

மா..கயிலை நா..தன் ஸத் குருவே

மாயை நீக்கும் மாசிலா மாமணியே (மாமேகம்)

%d bloggers like this: