Archive for October 1, 2011

Posted in Shivan with tags , , , , , , , , , , , , , , on October 1, 2011 by Melody

YouTube link: http://www.youtube.com/watch?v=bt6ASc-0HU4   

 

hindOLam        Adi       Nagpur Srinivasan

26.06.1966 Calcutta 05.30PM (Modified on: 30.09.2011)

Pallavi

dIna daYALA dEvAdi dEvA

ARudal tEDiDum uLLattait tERRiDum (dIna)

a. pallavi

vempuli pAdarum mAmuni patanjaliyum

nAvArattudittup pORRi magiznda (dIna)

saraNam

kUttanin agandai azindiDac ceydu

darumikkup poRkizi kiDaittiDac ceydu

OnkArapporuLAna saravaNabhavanai

nAnilam cezhittiDat tOnRiDac ceyda (dIna)

 

 

ஹிந்தோளம்   ஆதி   நாகபுரி ஸ்ரீனிவாஸன்

26.06.1966 கல்கத்தா 05.30PM (திருத்தப்பட்ட நாள்:30.09.2011)

பல்லவி

தீன தயாளா தேவாதி தேவா

ஆறுதல் தேடிடும் உள்ளத்தைத் தேற்றிடும் (தீன)

அ. பல்லவி

வெம்புலி பாதரும் மாமுனி பதஞ்சலியும்

நாவாரத் துதித்துப் போற்றி மகிழ்ந்த (தீன)

சரணம்

கூத்தனின் அகந்தை அழிந்திடச் செய்து

தருமிக்குப் பொற்கிழி கிடைத்திடச் செய்து

ஓங்காரப்பொருளான சரவணபவனை

நானிலம் செழித்திடத் தோன்றிடச் செய்த (தீன)

%d bloggers like this: