nenjam miga vADi
YouTube link: http://www.youtube.com/watch?v=FI4PdNPmN5E
dEsh (or) maduvanti rUpakam Nagpur Srinivasan
28.06.1966 Calcutta 09.45 PM (Modified on: 26.09.2011)
Pallavi
nenjam miga vADit tEDiDum anbarkkut
tanjamaruLum vaLLalE – en deyvamE (nenjam)
anupallavi
uLLam sOrndu naDaiyum taLarndu uDalum
melindadaiyA irakkam kATTiDa vENDum aiyA (nenjam)
saraNam
sendUr murugA sEvaRkoDiyait tAngiDum mAl marugA
kandA kumarA nizhal tandenai nI kAttiDa vENDum aiyA
pApattaip pOkkat tApam migak koNDu nADinEn vElavanE (unai)
kObam koLLAmal darisanam tandiDa gAnamayil ERi vA murugA (nenjam)
தேஷ் (அ) மதுவந்தி ரூபகம் நாகபுரி ஸ்ரீனிவாஸன்
28.06.1966 கல்கத்தா 09.45 PM (திருத்தப்பட்ட நாள்: 26.09.2011)
பல்லவி
நெஞ்சம் மிக வாடித் தேடிடும் அன்பர்க்குத்
தஞ்சமருளும் வள்ளலே – என் தெய்வமே (நெஞ்சம்)
அனுபல்லவி
உள்ளம் சோர்ந்து நடையும் தளர்ந்து உடலும்
மெலிந்ததையா இரக்கம் காட்டிட வேண்டும் ஐயா (நெஞ்சம்)
சரணம்
செந்தூர் முருகா சேவற்கொடியைத் தாங்கிடும் மால் மருகா
கந்தா குமரா நிழல் தந்தெனை நீ காத்திட வேண்டும் ஐயா
பாபத்தைப் போக்கத் தாபம் மிகக் கொண்டு நாடினேன் வேலவனே (உனை)
கோபம் கொள்ளாமல் தரிசனம் தந்திட கானமயில் ஏறி வா முருகா (நெஞ்சம்)
Leave a Reply