vEgam niRainda ulagamidil
YouTube link: http://www.youtube.com/watch?v=YVaJdO99pDc
rAgamAlikai Adi Nagpur Srinivasan
04.08.1966 Calcutta 9.00PM (Modified on: 18.09.2011)
Pallavi
KIravANi
vEgam niRainda ulagamidil – nAn
unaimaRandu ODikkaLaittEn (vEgam)
a. pallavi
ADiya ATTam tEDiya poruL edilum
manamadu sellAdun ninaivAgi ninREn (vEgam)
saraNam
KEdAragauLai
KandA murugA unaiyanRi vERu
gati uNDO? idai nI maRandu ninRAyO?
GnAniyar tEDum karupporuLE kadir
kAmam uRaiyum KaruNai vaDivE –
[vEgam niRainda ulagamidil
unaiyanRi vERu gati uNDO?]
amrutavarshiNi
Mayilinil vArAyO? darisanam tanden
tAbattait tIrAyO? tuLittuLiyAy tuDikkum
uLLattin tuyaraip pOkkiDa suDar vElEndi
PArvati bAlA Pazhanimalai vElA viraindODi
[vEgam niRainda ulagamidil Mayilinil vArAyO?]
HamSanAdam
KaliyilE kaNkaNDa deyvam nI KumarA
Malai thanai viTTu ennaik kAttiDa vENDum
silaiyAy ninRAl tIrumA en tuyaram? idai
uNarndum murugA tayakkam koLvadEnO?
[vEgam niRainda ulagamidil kaNkaNDa deyvam nI]
BImplAS
vidiyinai mARRa vallavanE azhagA
isaiyenum innamudaip paDaitiDuvEn nAn
nAda rUpamE nAnmaRai pORRum
nAn vaNangum nAyakanE vA
[vEgam niRainda ulagamidil vidiyinai mARRa vallavanE]
ராகமாலிகை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
04.08.1966 கல்கத்தா 9.00PM (திருத்தப்பட்ட நாள்: 18.09.2011)
பல்லவி
கீரவாணி
வேகம் நிறைந்த உலகமிதில் – நான்
உனைமறந்து ஓடிக்களைத்தேன் (வேகம்)
அ. பல்லவி
ஆடிய ஆட்டம் தேடிய பொருள் எதிலும்
மனமது செல்லாதுன் நினைவாகி நின்றேன் (வேகம்)
சரணம்
கேதாரகௌளை
கந்தா முருகா உனையன்றி வேறு
கதி உண்டோ? இதை நீ மறந்து நின்றாயோ?
ஞானியர் தேடும் கருப்பொருளே கதிர்
காமம் உறையும் கருணை வடிவே –
[வேகம் நிறைந்த உலகமிதில் உனையன்றி வேறு கதி உண்டோ?]
அம்ருதவர்ஷிணி
மயிலினில் வாராயோ? தரிசனம் தந்தென்
தாபத்தைத் தீராயோ? துளித்துளியாய் துடிக்கும்
உள்ளத்தின் துயரைப் போக்கிட சுடர் வேலேந்தி
பார்வதி பாலா பழனிமலை வேலா விரைந்தோடி
[வேகம் நிறைந்த உலகமிதில் மயிலினில் வாராயோ?]
ஹம்ஸநாதம்
கலியிலே கண்கண்ட தெய்வம் நீ குமரா
மலை தனை விட்டு என்னைக் காத்திட வேண்டும்
சிலையாய் நின்றால் தீருமா என் துயரம்? இதை
உணர்ந்தும் முருகா தயக்கம் கொள்வதேனோ?
[வேகம் நிறைந்த உலகமிதில் கண்கண்ட தெய்வம் நீ]
பீம்ப்லாஸ்
விதியினை மாற்ற வல்லவனே அழகா
இசையெனும் இன்னமுதைப் படைத்திடுவேன் நான்
நாத ரூபமே நான்மறை போற்றும்
நான் வணங்கும் நாயகனே வா
[வேகம் நிறைந்த உலகமிதில் விதியினை மாற்ற வல்லவனே]
Leave a Reply