KaNNan kathAmrutamE
This narrates the main KrushNa lIlais in a nutshel and I thought it would be a gift for the ensuing KrushNAshTami. It is a bhajan type song and not in the kriti format.
YouTube link: http://www.youtube.com/watch?v=4q1kF7KlUCE
Sindubhairavi Adi Nagpur Srinivasan
30.11.1965 Calcutta 06.00 AM (Modified on: 09.08.2011)
Pallavi
KaNNan kathAmrutamE kaRkaNDu pOlAgumE (KaNNan)
saraNam
01. dEvaki vaSudEvar maindanAyppAril naLLiravil piRanda (KaNNan)
02. nandagOpanum YashOdaiyum anbuDan aravaNaittu vaLartta GOkulak (KaNNan)
03. mAyappUtanaiyum mAyAvigaL palarum mOkshamaDaiyac ceyda (KaNNan)
04. GOvardana giriyaik kuDaiyAy piDitta GOpAlan nIlavaNNan mAyak (KaNNan)
05. KALinga nardhanam seydu AyargaLaik kAttu rakshitta engaL tiruk (KaNNan)
06. uddhavar agandaiyai azhikka rAdhaiyiDam tUdu anuppiyavan anda (KaNNan)
07. rRukmiNiyai maNandu, Satya BhAmAviRkum vazhi kATTiya nEsan avan (KaNNan)
08. vENuvin nAdattAl bhuvanam tanai ANDa puNyan purushOttaman (KaNNan)
09. Pala rUpam pala nAmam koNDE GOpiyarai magizhvitta aRpudanAm (KaNNan)
10. Atma naNban SudA…mAvin vaRumaiyai nIkki aruL seydavan Kamalak (KaNNan)
11. KamSAdiyOrgaLai azhittu yadukulam kAtta kamanIyanAm kaliyuga (KaNNan)
12. PANDavaruDan kUDi kauravarai mAyttu pAr pugazhum GItaitanait tanda (KaNNan)
ஸிந்துபைரவி ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
30.11.1965 கல்கத்தா 06.00 AM (திருத்தப்பட்ட நாள்: 09.08.2011)
பல்லவி
கண்ணன் கதாம்ருதமே கற்கண்டு போலாகுமே (கண்ணன்)
சரணம்
01. தேவகி வஸுதேவர் மைந்தனாய்ப் பாரில் நள்ளிரவில் பிறந்த (கண்ணன்)
02. நந்தகோபனும் யஷோதையும் அன்புடன் அரவணைத்து வளர்த்த கோகுலக் (கண்ணன்)
03. மாயப்பூதனையும் மாயாவிகள் பலரும் மோக்ஷமடையச் செய்த (கண்ணன்)
04. கோவர்தன கிரியைக் குடையாய் பிடித்த கோபாலன் நீலவண்ணன் மாயக் (கண்ணன்)
05. காளிங்க நர்தனம் செய்து ஆயர்களைக் காத்து ரக்ஷித்த எங்கள் திருக் (கண்ணன்)
06. உத்தவர் அகந்தையை அழிக்க ராதையிடம் தூது அனுப்பியவன் அந்த (கண்ணன்)
07. ருக்மிணியை மணந்து, ஸத்ய பாமாவிற்கும் வழி காட்டிய நேசன் அவன் (கண்ணன்)
08. வேணுவின் நாதத்தால் புவனம் தனை ஆண்ட புண்யன் புருஷோத்தமன் (கண்ணன்)
09. பல ரூபம் பல நாமம் கொண்டே கோபியரை மகிழ்வித்த அற்புதனாம் (கண்ணன்)
10. ஆத்ம நண்பன் ஸுதா…மாவின் வறுமையை நீக்கி அருள் செய்தவன் கமலக் (கண்ணன்)
11. கம்ஸாதியோர்களை அழித்து யதுகுலம் காத்த கமனீயனாம் கலியுக (கண்ணன்)
12. பாண்டவருடன் கூடி கௌரவரை மாய்த்து பார் புகழும் கீதைதனைத் தந்த (கண்ணன்)
Leave a Reply