tEnaippOl inittiDum
YouTube link: http://www.youtube.com/watch?v=IjND5KCESv0
rAgamAlikai Adi Nagpur Srinivasan
07.05.1965 Pudukkottai 04.55 PM (Modified on: 04.07.2011)
Sindubhairavi
tEnaippOl inittiDum nAmam – nam
Unai urukkip paraviDum nAmam (2)
MurugA enRolittiDum nAmam – ARAyp
perugAdO kaNNIr adaikkETTuk kETTu (tEnaippOl)
dEsh
silaiyAga niRkinRa nAmam – adu
malaimIdil uRaivOn maruganin nAmam (2)
alai pOlat tuyar vATTinAlum – nilai
kulaiyAdu ennai iruttiDum nAmam (tEnaippOl)
Sindubhairavi
aDiyArgaL nADiDum nAmam
anjEl anjElenRu aNaittiDum nAmam (2)
kaDidAna vAzhvinait tAnga unnAl
muDiyum ena vazhi kATTiDum nAmam (tEnaippOl)
dEsh
eDukkat toDarum piRavi tannait
taDuttiDa vandiDum vaDivElan nAmam (2)
paDuttiDum pAzhvinaigaL nInga
aDuttiDum nammai ATkoLLum nAmam (tEnaippOl)
ராகமாலிகை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
07.05.1965 புதுக்கோட்டை 04.55 PM (திருத்தப்பட்ட நாள்: 04.07.2011)
ஸிந்துபைரவி
தேனைப்போல் இனித்திடும் நாமம் – நம்
ஊனை உருக்கிப் பரவிடும் நாமம் (2)
முருகா என்றொலித்திடும் நாமம் – ஆறாய்ப்
பெருகாதோ கண்ணீர் அதைக்கேட்டுக் கேட்டு (தேனைப்போல்)
தேஷ்
சிலையாக நிற்கின்ற நாமம் – அது
மலைமீதில் உறைவோன் மருகனின் நாமம் (2)
அலை போலத் துயர் வாட்டினாலும் – நிலை
குலையாது என்னை இருத்திடும் நாமம் (தேனைப்போல்)
ஸிந்துபைரவி
அடியார்கள் நாடிடும் நாமம்
அஞ்சேல் அஞ்சேலென்று அணைத்திடும் நாமம் (2)
கடிதான வாழ்வினைத் தாங்க உன்னால்
முடியும் என வழி காட்டிடும் நாமம் (தேனைப்போல்)
தேஷ்
எடுக்கத் தொடரும் பிறவி தன்னைத்
தடுத்திட வந்திடும் வடிவேலன் நாமம் (2)
படுத்திடும் பாழ்வினைகள் நீங்க
அடுத்திடும் நம்மை ஆட்கொள்ளும் நாமம் (தேனைப்போல்)
Leave a Reply