YouTube link: https://www.youtube.com/watch?v=-d2itexONms
KEdAra GauLai Adi Nagpur Srinivasan
27.01.2015 Madras 9.15 PM (Modified on: 25 July 2020)
Pallavi
iDadu padam tUkki ADiDum deyvamE en
iDargaLai nIkkiDa manamilaiyA? (iDadu)
anu pallavi
GAnagamEgik kaDum tavam puri munigaL
KANAk kAkshi enakkaLittuk kAkka (iDadu)
caraNam
MAsilA uruvE mANikkamEyen manadu
tUsilAdirukkac ceyyum tUmaNiyE
KAsilAdavarkkum pEccilAdavarkkum
MUsilA peerkkum mOkshmaLikka (iDadu)
கேதாரகௌளை ஆதி நாகபுரி ஸ்ரீனிவாஸன்
27.01.2015 மதராஸ் 9.15 PM (திருத்தப்பட்ட நாள்: 25 July 2020)
பல்லவி
இடது பதம் தூக்கி ஆடிடும் தெய்வமே என்
இடர்களை நீக்கிட மனமிலையா? (இடது)
அனுபல்லவி
கானகமேகிக் கடும் தவம் புரி முனிகள்
காணாக் காக்ஷி எனக்களித்துக் காக்க (இடது)
சரணம்
மாசிலா உருவே மாணிக்கமேயென் மனது
தூசிலாதிருக்கச் செய்யும் தூமணியே
காசிலாதவர்க்கும் பேச்சிலாதவர்க்கும்
மூசிலா பேர்க்கும் மோக்ஷமளிக்க (இடது)
You must be logged in to post a comment.